இந்தியா -இலங்கை காம்பேக் கோப்பை கிரிக்கெட் தொடர்

Tuesday, September 15, 2009

இந்தியா இலங்கை இடையே நடந்த காம்பேக் கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் இந்தியா வென்று கோப்பையை வென்றது.

இந்தியா,இலங்கை மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் இடையே நடைப்பெற்ற காம்பேக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நடைப்பெற்றது. இதில் தகுதிச்சுற்றில் நியூசிலாந்து இலங்கை மற்றும் இந்தியாவிடம் தோற்று தகுதி பெற தவறியது.

நேற்று நடைப்பெற்ற இறுதிப்போட்டியில் இந்தியாவும் இலங்கையும் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் களம் இறங்கிய இந்தியா 319 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்தது.

அதனை தொடர்ந்து விளையாடிய இலங்கை 46.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கட்களையும் இழந்து 273 ரன்கள் எடுத்தது.

ஆட்ட நாயகன் விருதும் தொடர் நாயகன் விருதும் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டது.

இலங்கையில் போர் என்ற பெயரில் இனப்படுகொலைகள் நடந்து வரும் சூழலில் இந்திய அணி அங்கு சென்று கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

அறிஞர் அண்ணா (நூற்றாண்டு விழா)

அறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு விழா இன்று(15.09.09).
அவர் பிறந்தது 15-09-1909 அன்று. தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை
கொண்டுவந்தவர்.

சுத்ந்திரமடைந்ததில் இருந்து தமிழ் நாட்டை ஆண்டு வந்த காங்கிரஸ்
ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தவர்.

இன்று தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளோ அல்லது புதிதாக
அரசியலுக்கு வர வேண்டும் என்றாலோ கட்சியின் பெயரிலாவது
அண்ணாவின் பெயர் இருந்தாக வேண்டும் என்கிற கட்டாயத்துக்கு
வந்து விட்டார்கள். இல்லை என்றால் தமிழ்நாட்டில்
அங்கீகாரம் பெற முடியாது.

மேலும் தெரிந்து கொள்ள http://www.arignaranna.info



சேலம் - சென்னை விமான இயக்கம்

Friday, September 11, 2009

சேலத்திற்கும் சென்னைக்கும் விமான சேவையை வழங்க கிங் ஃபிசர் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வளவு நாளாக அரசியல் தலைவர்கள் மட்டுமே வந்து செல்ல பயன்பட்ட விமான நிலையம், இனியாவது மக்களின் நலனுக்காக பயன்படட்டும்.இச்சேவை அக்டோபர் 25, 2009 நாளிலிருந்து தொடங்கப்பட உள்ளது.

இதற்கு முன் சென்னை-சேலம் விமான வசதி இருந்தது. ஆனால் போதிய பயணிகள் இல்லாத காரணத்தினால் விமான சேவை ரத்து செய்யப்பட்டது. அப்படி இருக்க கிங்ஃபிசர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள இந்த அனுமதி முக்கியமாக படுகிறது.

கிங்ஃபிசர் நிறுவனத்தின் கட்டணம் மற்றவற்றை விட அதிகம். அப்படி இருக்க, அதில் எவ்வாறு மக்கள் பயணம் செய்வார்கள். ஏனெனில், சேலத்திலிருந்து சென்னைக்கு 1 மணி நேரத்திற்கும் மேலாக பயண நேரம் உள்ளது. இரயிலில் ஐந்து அல்லது ஆறு மணி நேரத்தில் சென்னைக்கு வந்து விடலாம்!!!!

மேலும் இது சென்னையிலிருந்து மதியம் 2.45 PM கிளம்பி சேலத்திற்கு 3.45க்கு செல்லும். மற்றும் சேலத்திலிருந்து 4.20 P.Mக்கு கிளம்பி 5.20 PMக்கு சென்னைக்கு வந்து சேரும்.

இதற்கு பதிலாக சேலத்திலிருந்து காலை 8 மணிக்கு கிளம்பி சென்னைக்கு 9 அல்லது 10 மணிக்குள் வந்து சேர்ந்து, சென்னையிலிருந்து இரவு கிளம்பி 7 அல்லது 8 மணிக்கு மேல் கிளம்பி சேலம் போய் சேர்ந்தால், சென்னைக்கு வேலைக்குச்சென்றுவருபவர்களும் சென்று வர வசதியாக இருக்கும்.
எப்படியோ திரும்பவும் விமான சேவை வந்துள்ளது, இதுவாவது தொடருகிறதா என்று பார்ப்போம்!!!!

சீனாவின் எல்லை மீறல்

சில நாட்களுக்கு முன்பு சில நாளிதழ்களில் மட்டும், சீனாவின் எல்லை மீறல் பற்றிய செய்தி வெளிவந்து இருந்தது.

அருணாசல பிரதேசம் என்று நினைக்கிறேன்... அந்த மாநிலத்தின் எல்லை பகுதியினுள் சீன ராணுவம் நுழைந்தது என்று செய்தி வெளிவந்தது. சுமார் 1.5 கி.மீ. தூரம் இந்திய எல்லையினுள் நுழைந்து அங்கு இருந்த பகுதிகளுக்கு சிவப்பு வண்ணத்தில் வர்ணம் பூசி சென்று விட்டதாக செய்தி வெளியானது.

இந்த செய்தியை படித்ததும், எல்லைப்பாதுகாப்பை நாம் எவ்வளவு நன்றாக வைத்திருக்கிறோம் என்பது புரிந்து விட்டது. அவர்கள் நமது எல்லையினுள் 1.5 கி.மீ. தூரம் வந்ததே பெரிய விசயம். அது மட்டும் இல்லாமல் அவர்கள் வந்து சென்றதற்கு அடையாளமாக சிகப்பு வர்ணம் வேறு பூசிவிட்டு சென்று விட்டனர்.

ஒரு வேளை இப்படி இருக்கலாம்..... அவர்கள் இதற்கு முன்பு பல முறை இந்தியாவினுள் ஊடுறுவி இருக்கலாம்.. அது இந்தியாவிற்கு தெரியாமல் இருந்திருக்கலாம், அதனால் கடுப்பாகி வர்ணம் அடித்தாலாவது இந்தியா தெரிந்து கொள்ளுமா? என்பத்ற்காக அவ்வாறு செய்திருக்கலாம்...

எல்லாம் சிதம்பர ரகசியம்....!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

மனிதனும் மிருகமும்

ஏதோ புதியதாக சொல்லப்போகிறேன் என நினைத்து படிக்காதீர்கள்.. மனிதனும் மிருகமும் இப்படியும் இருக்க முடியும் என்பதற்கு இந்த வீடியோவே சாட்சி....

IAS Rankers Top Answer

Thursday, September 10, 2009

IAS TOPPERS ANSWERS
Q
. How can you drop a raw egg onto a concrete floor without cracking it?
A. Concrete floors are very hard to crack! (UPSC Topper)

Q.
If it took eight men ten hours to build a wall,how long would it take four men to build it?
A. No time at all it is already built. (UPSC 23 Rank Opted for IFS)

Q.
If you had three apples and four oranges in one hand and four apples and three oranges in the
other hand, what would you have?

A. Very large hands.(Good one) (UPSC 11 Rank Opted for IPS)

Q.
How can you lift an elephant with one hand?
A. It is not a problem, since you will never find an elephant with one hand. (UPSC Rank 14 Opted for IES)

Q.
How can a man go eight days without sleep?
A. No Probs , He sleeps at night. (UPSC IAS Rank 98)

Q.
If you throw a red stone into the blue sea what it will become?
A. It will Wet or Sink as simple as that. (UPSC IAS Rank 2)

Q.
What looks like half apple ?
A : The other half. (UPSC - IAS Topper )


Q.
What can you never eat for breakfast ?
A : Dinner.

Q.
What happened when wheel was invented ?
A : It caused a revolution.

Q.
Bay of Bengal is in which state?
A : Liquid (UPSC 33Rank )

கணினி நகைச்சுவை...



இவை சிரிக்க மட்டுமே.. பார்த்து விட்டு கண்டிப்பாக சிரிக்க வேண்டும்...










என்னை கவர்ந்த ஓவியங்கள்

இவை எல்லாம் ஓவியங்களா? மிகவும் அருமையான ஓவியரின் படைப்புகள்









நண்பனின் மின் அஞ்சல்

Wednesday, September 9, 2009

நண்பன் ஒருவன் அனுப்பிய மின் அஞ்சல்:

ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்பீங்க?" - நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா. நானும் விவரிக்க ஆரம்பிதேன்.
"
வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும். அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும். இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்."
"
அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".
"
இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank, இல்ல எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க. இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.
"
சரி"
"
இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales Consultants, Pre-Sales Consultants....". இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க. காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்? ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா? அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை.
"
இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"?
"MBA, MS
னு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க."
"
முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்?" - அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.
"
சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?"
"
அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்"
"500
நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?"
"
இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான். ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது. இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliver பண்ணுவோம். அத பாத்துட்டு "ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல, எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்.
"
அப்புறம்?" - அப்பா ஆர்வமானார்.
"
இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே "இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம்.
"CR-
னா?"
"Change Request.
இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை பார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு சொல்லுவோம். இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்."
அப்பாவின்
முகத்தில் லேசான பயம் தெரிந்தது.
"
இதுக்கு அவன் ஒத்துபானா?"
"
ஒத்துகிட்டு தான் ஆகணும். முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?"
"
சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"
"
முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம். இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. இவரது தான் பெரிய தலை. ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு."
"
அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு."
"
அதான் கிடையாது. இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது."
"
அப்போ இவருக்கு என்னதான் வேலை?" - அப்பா குழம்பினார்.
"
நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறது தான் இவரு வேலை."
"
பாவம்பா"
"
ஆனா இவரு ரொம்ப நல்லவரு. எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்."
"
எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?"
"
ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு. நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை."
"
நான் உன்னோட அம்மா கிட்ட பண்றது மாதிரி?!"
"
இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய அடி பொடிங்க இருப்பாங்க."
"
இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?"
"
வேலை செஞ்சா தானே? நான் கடைசியா சொன்னேன் பாருங்க... டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர்,வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு" சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க."
"
அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே? அவங்களுக்கு என்னப்பா வேலை?"
"
இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை. புடிக்காத மருமக கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி."
"
ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா? புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?"
"
அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"
"
கிளையன்ட் சும்மாவா விடுவான்? ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?"
"
கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்."
"
எப்படி?"
"
நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு. அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின, உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை." இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம். அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு, இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்".
"
சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?"
"
அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கணும்."
"
அப்புறம்?"
"
ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒன்ன பண்ணி இருக்குற மாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்."
"
அப்புறம்?"
"
அவனே பயந்து போய், "எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒன்னு, ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு" புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க." இதுக்கு பேரு "Maintanence and Support". இந்த வேலை வருஷ கணக்கா போகும்.
"
ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி. தாலி கட்டினா மட்டும் போது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு" இப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்.
"
எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா."

V.O.Chithambaram Pillai வ.உ.சிதம்பரம் பிள்ளை

Sunday, September 6, 2009







ஆங்கிலத்தில்

வ.உ.சிதம்பரம் அவர்களை நாம் மறந்தே போய்விட்டோம். அவரது பிறந்த நாளான நேற்று(5-9-2009) எங்கும் எந்த விழாவும் நடந்ததாக தெரியவில்லை. அரசும் எந்த விழாவையும் ஏற்பாடு செய்ததாக தெரியவில்லை. இப்படி இருந்தால் இன்றைய இளைய சமுதாயத்திற்கு, நமது சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பே இல்லாமல் போய் விடும்.

தற்போது எல்லாம் தலைவர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள் போன்றோர் ஜாதியின் அடிப்படையில் போற்றப்படுகிறார்கள். இது மிகவும் வருந்த தக்க விச(ய)ம்.

எனது முதல் தமிழ் பிளாக் அனுபவம்....

Saturday, September 5, 2009


நானும் எனது முதல் தமிழ் வலையை பிண்ண ஆரம்பிக்க மிகவும் கடினப்பட்டேன். கல்ப்பையின் தமிழ் Tamil kalappai keyboard layout கிடைக்காமல் சில எழுத்துக்களை டைப் செய்வது மிகவும் கடினமாக இருந்தது. அதன் பிறகு கூகுள் உதவியுடன் இதனை பெற்றேன். அதனால் இதனை எனது பக்கத்தில் சேர்த்துள்ளேன்.


இலங்கை தமிழர்

இலங்கையில் தமிழனின் கதி: http://www.tamil.net/newtamil/ekalappai_1.html

மனதிற்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.

New Tamil Movies

1.Ninaithale Inikkum -
Comes with a title of Kamal Hasan's old tamil movie. It is a remake of Malayalam superhit movie "Classmate".

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.......


Happy Teacher's Day

Hi We wish all our teachers a very Happy Teacher's Day...

Sarvapalli Radhakrishnan
(5th September 1888- 17th April 1975)

For more information on him visit
தமிழில்

இன்று மாலை சில பள்ளிகள் வழியாக சென்றேன். நான் செல்லும் போது அங்கு ஆசிரியர் தின விழா நடந்து கொண்டிருந்தது. ஆர்வம் மிகுதியில் பள்ளியின் உள்ளே எட்டிப்பார்த்தேன். ஓர் ஆசிரியர் பேசிக்கொண்டு இருந்தார். நான்கு அல்லது ஐந்து பேர் அமர்ந்து கேட்டுக்கொண்டு இருதார்கள். ஒரு மாணவனையோ அல்லது மாணவியையோ காணவில்லை. ஏன் என்று தெரியவில்லை. ஒரு வேளை இன்று ஆசிரிய்ர் தினத்தை முன்னிட்டு உலகத்தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக ஏதாவது தமிழ் திரைப்படம் போட்டு இருக்கலாம். என்னுடன் வந்த என் மனைவி அவரது பள்ளிக்கால்த்தை நினைவு கூர்ந்தாள். அது ஒரு காலம்.

பள்ளிகளாவது, மாணவர்க்ளை கண்டிப்பாக வரச்சொல்லி இருக்கலாம். அல்லது பெற்றோர்களாவது இது போன்ற நாட்க்ளை குழந்தைகளுக்கு எடுத்து சொல்லி தெரிந்து கொள்ள செய்யலாம். பார்ப்போம் இனி வருங்கால சந்ததியினரை.. ஆசிரியரையோ அல்லது குருவையோ மதிக்காத தேசம் வளருவது கடினம்......