பள்ளிகளின் கட்டணங்கள்

Saturday, October 31, 2009

எனது மகனை பள்ளியில் சேர்ப்பதற்காக சென்னையில் உள்ள ஏனைய பள்ளிகளின் வலைய தள்ங்களை பார்த்துவிட்டேன். அவர்களின் வித்தியாசமான கட்டணம் தலைசுற்ற வைப்பது போல் உள்ளது. அதனை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

இதில் கேந்திரவித்யாலயா (Kendriya Vidyalaya- KV) எனும் மத்திய அரசு நடத்தும் பள்ளியின் கட்டணத்தையும் காண்பித்துள்ளேன். அதற்கும் தனியார் பள்ளிகளுக்கும் உள்ள வித்தியாசத்தை பாருங்கள். மயக்கமே வரும்!!!!!!

Padma Seshadri School




Padma Seshadri Millinium School



Omega International School



Gateway Internation School
என்னுடன் பணியாற்றும் நண்பரின் பையன் இந்த பள்ளியில் படிக்கிறான். கட்டணம் எவ்வளவு என்று பள்ளியின் வலையதளத்தில் கொடுக்கவில்லை.
source: http://www.gatewaytheschool.in

Kendriya Vidyalaya


மேலே கொடுக்கப்பட்டவை தவிர மற்ற நல்ல பள்ளிகளின் வலையதளங்கள் இருந்தால் தெரிவிக்கவும்.

தமிழ் நாட்டில் கல்வி முறையை விளக்கும் படம்


சென்னையில் உள்ள பள்ளிகளின் பட்டியலை பார்க்கலாம் என தமிழக அரசின் பள்ளிக்கல்வி இயக்கத்தின் வலையதளத்தை பார்த்த போது மேலே பார்க்கும் படம் கிடைத்தது. ஆனால் சென்னையில் உள்ள பள்ளிகளின் பட்டியல் அதில் இல்லை. மேலும் அதில் உள்ள தகவல்கள் எல்லாம் மிகவும் பழையதாக உள்ளது. இதனை அவ்வப்போது புதுப்பித்தால் தான் தற்பொழுது என்ன நட்க்கிறது என்பது பொதுமக்களுக்கு தெரியவரும்.

இதன் இணையதளம் http://www.tn.gov.in/schooleducation/

இதன்பின் மேலும் கிளரியதில் கூகிள் உதவியுடன் இந்த இணையதளத்தை கண்டறிந்தேன்.


நான் என்னுடைய மொத்த பள்ளி வாழ்க்கைக்கு செலவழித்த கட்டணத்தை விட இப்பொழுது ஒரு வருடத்திற்கு ஆகும் கட்டணம் அதிகமாக இருக்கிறது.

முன்பெல்லாம் கிருத்துவர்கள் தான் அதிகமாக பள்ளிகள் நடத்தி வந்தார்கள். அதில் சேர்ப்பது மற்றும் படிப்பது என்பது அப்பொழுது பெருமைக்குரிய விசயமாக இருந்தது. இப்பொழுது அனைவரும் பள்ளிகள் தொடங்கிவிட்டனர். ஆனால் கிருத்துவர்களின் பள்ளி கட்டணங்களை விட இவற்றின் கட்டணங்கள் மிக மிக அதிகமாக உள்ளது.

பள்ளி என்பது சேவை என்பது போய், அது ஒரு நல்ல வியாபாரமாகவே பார்க்கப்படுகிறது. இது பள்ளிகளுக்கு மட்டுமல்ல கல்லூரிகளுக்கும் பொருந்தும். அதனால் தான் அனைத்து அந்நாள் மற்றும் இந்நாள் அரசியல்வாதிகளும், பெரிய ஆட்களும் பள்ளி மற்றும் கல்லூரி ஆரம்பித்து வியாபாரத்தை தொடங்கிவிட்டார்கள்.

முன்பு போலவே கல்வி என்பது அரசாங்கத்தால் மட்டுமே நடத்தப்பட்வேண்டும். மேலும் இது கட்டாய மற்றும் இலவசமாகவே வழங்கப்பட வேண்டும்.

சென்னையில் மழைக்காலம்

Thursday, October 29, 2009

இப்பொழுது சென்னையில் மழை ஆரம்பமாகிவிட்டது.இப்பொழுதே வழி எங்கும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.கொசு தொல்லை வேறு அதிகமாகிவிட்டது.
இன்று (29/10/2009) விடியற்காலையில் இருந்து 1 மணி நேரத்திற்கு மேல் மழை பெய்தது. அதற்கே எங்கள் பகுதியில் நிறைய இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்க ஆரம்பித்து விட்டது.இது எங்கள் பகுதியில் மட்டும் அல்ல, பெரும்பாலான சென்னையின் பகுதியில் இப்படிதான் இருக்கிறது.
ஒவ்வொரு வருடமும் இது தொடர்கதையாக தொடர்கிறது.அரசு எடுக்கும் நடவடிக்கைகள் போதவில்லையா அல்லது நடவடிக்கையே இல்லையா என்பது தெரியவில்லை..
ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் மழையால் ஏற்பட்ட பாதிப்பை நாம் நன்கு அறிவோம். அதனை பார்த்து தமிழக அரசு என்ன முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுத்தது என்றே தெரியவில்லை. நமது மேயர் சென்னையில் அனைத்து முன்னெச்செரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டுவிட்டதாகவும் மழைக்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
இது ஏதோ மழை வருவதற்கு முன்பு சம்பிரதாயமாக கூறுவது போல்தான் உள்ளது.

நமது மக்களும் மழைக்கு பிறகு அரசும், அரசியல்வாதிகளும் தரும் இலவசத்தை வாங்குவதற்கு போட்டி போடுகிறார்கள். ஏன் மழையால் வரும் பாதிப்பை முன் கூட்டியே தடுக்கவில்லை என்று யாரும் கேட்பதில்லை. இலவசங்கள் அனைவரது கண்களையும் மூடிவிடுகிறது. அதனை அனைத்து கட்சிகளும் பயன்படுத்திக்கொள்கிறது.

இதனை பற்றி அலச ஆரம்பித்தால் நிறைய பேச வேண்டும். போதிய அடிப்படை வசதிகளே இல்லாத பகுதிகளில் வீடுகளை கட்டிகொள்வதால் ஏற்படும் பிரச்சனைகளில் இது முதன்மையானது.

சென்னையின் பல்வேறு ஏரி, குளங்கள் பிளாட் போட்டு விற்பனை ஆகிக்கொண்டு இருக்கிறது. இது அனைவருக்கும் தெரியும். அப்படிபட்ட இடங்களில் தான் நாம் இருக்கிறோம். இப்படி நீர்தேக்கங்களை எல்லாம் வீடு கட்ட பயன்படுத்தினால் நீர் தேங்க இடம் இல்லாமல் ரோடுகளில் எல்லாம் தண்ணீர் தேங்கிவிடுகிறது. இதனை தடுக்க வேண்டிய அரசோ பல ஏரிகளில் வீட்டு வசதி வாரிய வீடுகளை கட்டி விற்கிறது. மேலும் அரசியல்வாதிகள் தங்கள் பங்குக்கு பிளாட் போட்டு விற்று விடுகின்றனர். அரசு அதிகாரிகள் தங்களுக்கு வரவேண்டியது வந்துவிட்டால் அதனை கண்டு கொள்வதே இல்லை.

கடைசியில் கஷ்டப்படுவது என்னவோ பொதுஜனங்களாகிய நாம் தான். இந்நிலை என்று மாறுமோ??????

மகனுக்கு முதல் பள்ளி அட்மிசன் வாங்கிய அனுபவம்

Monday, October 26, 2009

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நல்ல பள்ளிகளில் அதுவும் ஒன்று. மேலும் அங்கு கட்டணம் மற்ற பள்ளிகளை விட குறைவு. அதனால் அங்கு குழந்தைகளை சேர்க்க அனைவரும் விரும்புவர்.

CBSE வழி கல்விமுறை மற்றும் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி சொல்லிக்கொடுக்கிறார்கள். எனவே பள்ளிக்கு நல்ல பெயர். எனது மனைவியின் அக்கா மகன் அங்கு தான் படித்தான். அவன் மிகவும் நன்றாக சொல்லிக்கொடுக்கிறார்கள் என சொல்லியதால் நாங்கள் அந்த பள்ளியையும் எங்களது அப்ளிகேசன் வாங்கும் list ல் வைத்து இருந்தோம்.

இந்த வாரம் ஞாயிற்றுகிழமை, அந்த பள்ளியில் அப்ளிகேசன் கொடுப்பதாக அறிவித்திருந்தார்கள். அதனை வாங்குவது பற்றி பள்ளியில் முன்னறே விசாரித்து வைத்து இருந்தேன். அவர்கள் காலையில் 8 மணிக்கு வந்தால் போதும், முதலில் வருவது எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள படாது என தெரிவித்திருந்தார்கள். அதனால் நான் காலை 5 மணிக்கு எதற்கும் போய் பார்கலாம் என்று சென்றேன்.

அங்கு போனால் 500 பேருக்கு மேல் வரிசையில் இருந்தார்கள். எப்பொழுது வந்தார்கள் என விசாரித்தால், இரவு 10.30 மணிக்கே வந்து விட்டதாக கூறினார்கள். நான் ஏதோ சீக்கிரமாக வந்து விட்டதாக நினைத்தால், இது என்ன கொடுமை என நினைத்தேன்!!...இரண்டு மணி நேரம் வரிசையில் அமைதியாக நின்றேன். 7 மணியளவில் பள்ளியின் கதவை திறந்தார்கள். ஏதோ சொர்க வாசல் கதவு திறந்தது போல், அனைவரும் அடித்து பிடித்து உள்ளே ஓடினார்கள். அதுவரை இருந்த வரிசை எல்லாம் கலைந்து போனது!!!!

எல்லோரும் ஓட, நானும் ஓடினேன். நான் உள்ளே செல்வதற்குள் அனைவரும் உள்ளே போட்டிருந்த நாற்காலிகளில் உட்கார்ந்து விட்டனர். நாங்கள் சில பேர் மட்டும் பாவமாக பார்த்தோம்.

சிறிது நேரம் கழித்து மேலும் சில நாற்காலிகள் போடப்பட்டன. அதில் வெற்றிகரமாக ஒரு நாற்காலியை பிடித்து அமர்ந்தேன். சிறிது நேரம் கழித்து, அங்கு வேறு ஒரு இடத்தில் டோக்கன் கொடுப்பதாக சொன்னார்கள். அதற்கு எழுந்து போவதா அல்லது கிடைத்த நாற்காலியை விடாமல் பிடித்து கொண்டு இருப்பதா என யோசித்து கொண்டு இருக்கும் பொழுதே, அங்கு கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். அடித்து பிடித்து டோக்கன் வாங்கினேன். அப்பாடா வாங்கிவிட்டேன் என நினைத்தால், இது வெறும் டோக்கன் மட்டும்தான், இதை கொண்டு registration செய்ய வேண்டும், அதற்கு 8 மணி வரை பொருத்திருங்க்ள் என்றனர்.

அதற்குள் registrationக்கு ஒரு பெரிய வரிசை ஏற்பட்டு விட்டது. எதற்கும் பள்ளியில் ஒரு சரியான வழிகாட்டுதல் இல்லை. ஏதோ musical chair விளையாடுவதை போன்று நாங்கள் எல்லாம் அழைந்தோம்.

பிறகு 8 மணிக்கு வரிசை நகர ஆரம்பித்து விட்டது. ஒரு வழியாக registration form fill செய்து கொடுத்து விட்டு வந்தேன். அந்த formல் ஏதோ வரிசை எண் இருந்தது. எதற்கு இந்த வரிசை எண் என்பது தெரியவில்லை. பள்ளியில் முன்னர் சொல்லியது போல், முதலில் வருவது எல்லாம் கணக்கில் எடுத்து கொள்ளபடாது என்றால், எதற்கு அந்த வரிசை எண் என்றே தெரியவில்லை.

இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், இரவு 10.30 மணிக்கே வந்து பள்ளியின் முன் வந்து இருந்தவர் எனக்கு பின்னால் வரிசையில் நின்று கொண்டு இருந்தார்!!!

அந்த பள்ளி மாணவர்களை தேர்ந்தெடுக்க கையாளும் முறை மிகவும் சுவாரசியமானது.

1. மாணவர்கள் பள்ளியில் இருந்து 3K.M. தொலைவிற்குள் இருக்க வேண்டும். -இது அனைவரும் ஒத்துக்கொள்ள கூடியது. அருகில் இருந்தால் மாணவன் சுலபமாக பள்ளி சென்று வரலாம். அதற்கு அவர்கள் முகவரி சான்று கேட்டார்கள். என்னிடம் ரேசன் கார்டு இருந்தது. ஆனால் தற்பொழுதுதான் நான் புதிய முகவரிக்கு மாற்ற கொடுத்து இருந்தேன். அத்னால் அதனை தற இயலவில்லை. பள்ளியில் கேட்டதற்கு கேஸ் சிலிண்டர் பில் இருந்தால் கூட போதும் என்றனர். அதனால் நான் அதனையும், எதற்கும் இருக்கட்டும் என்று ரேசன் கார்டு நகலையும் எடுத்து சென்றேன். Registration ஆரம்பிக்கும் சமயம் முகவரி சான்றாக கேஸ் பில்லை எல்லாம் எடுத்து கொள்ள மாட்டோம் என கூறி விட்டனர். அதனால் பழைய முகவரியை கொண்ட ரேசன் கார்டின் நகலையே கொடுத்தேன்.

2. மாணவர்களின் பிறந்த தேதி அவர்கள் சேரும் வகுப்பை பொறுத்து இருக்க வேண்டும் என்றனர். அதாவது LKG சேரும் குழந்தை ஜுலை முதல் தேதி 2010 அன்று சரியாக 3 வயது முடிந்து இருக்க வேண்டும் என்றனர். இரண்டு மாதம் முன்னரோ அல்லது பின்னரோ இருக்கலாமாம். எனது மகனுக்கு அது சரியாக வந்துவிட்டது. ஆனால் பல குழந்தைகள் October முதல் February வரை பிறந்து இருந்தார்கள். அவர்களுக்கு தான் கஷ்டம். அங்கு இருந்தவர்கள் பலர் இதை பார்த்துதான் குழந்தையே பெற்றுகொள்ள வேண்டும் போலிருக்கிறது என பேசிக்கொண்டனர். அதுவும் உண்மைதான் போலிருக்கிறது.

3. மேலே கூறியவற்றை தவிர அவர்கள் வேறு எதையுமே கேட்கவில்லை. பெற்றோருக்கு எந்த interview ம் இல்லை. அவர்கள் எந்த வேலை செய்கிறார்கள் அவர்களின் பின்புலம் என்ன என்று எந்த கேள்வியும் இல்லை. இதனால் அனைத்து தரப்பு மக்களின் குழந்தைகளும் அங்கு படிக்க முடியும். மிகவும் நல்ல விசயம் இதுதான்.

இந்திய பிரதமர் மேல் சீனா அதிருப்தி

Wednesday, October 14, 2009

இந்தியாவில் சீனாவின் அத்துமீறல்களை நாம் ஏற்கனவே இங்கு பகிர்ந்து கொண்டோம். இந்நிலையில் இந்திய பிரதமர் மேல் சீனா அதிருப்தி தெரிவித்து உள்ளது.

கடந்த 3 அக்டோபர் 2009 அன்று இந்திய பிரதமர் அருணாச்சல பிரதேசத்தில்
தேர்தல் பிரசாரம் செய்தார். இதற்கு சீனா தனது அதிருப்தியை
தெரிவித்துள்ளது. இதனை பற்றி செய்தி வெளியிட்டுள்ள சீன
வெளியுறவுத்துறை அமைச்சர், இருதரப்பு உரவுகளும் நல்லபடியாக
இருக்கும் நேரத்தில் இந்திய பிரதமரின் இந்த பயணம் கவலை அளிப்பதாக
தெரிவித்துள்ளது. இதனை பார்த்து அழுவதா அல்லது சிரிப்பதா என்பதுதான்
தெரியவில்லை...

மின் இணைப்பு தடை பற்றிய குறைகள் தெரிவிக்க

மின் இணைப்பு தடை பற்றிய குறைகள் தெரிவிக்க சென்னை
மின்வாரியம் கீழ்கண்ட மொபைல் நம்பர்களை அறிவித்துள்ளது.
தாம்பரம் கோட்டம் :
பல்லாவரம் மேற்கு - 9445850446
கடப்பேரி - 9445850447
தாம்பரம் மேற்கு - 9445850448

கே.கே.நகர் கோட்டம் :
மேற்கு கே.கே.நகர் - 9445850434
சூளைமேடு - 9445850435
அசோக்நகர் - 9445850436
வளசரவாக்கம் - 9445850437

அடையார் கோட்டம் :
அடையார் - 9445850438
வேளச்சேரி - 9445850439
இந்திராநகர் - 9445850440
கிண்டி கோட்டம் :
கிண்டி - 9445850442
நங்கநல்லூர் - 9445850443
ஆலந்தூர் - 9445850441
போரூர் கோட்டம் :
போரூர் - 9445850445

கோவா பயணம்

Tuesday, October 6, 2009


சென்னையிலிருந்து என்னுடைய மனைவி,மகன் மற்றும் என்னுடன் அலுவலகலத்தில் பணிபுரியும் நண்பர்களின் குடும்பத்துடன் கோவாவிற்கு செல்வது என்று முடிவானது.

சென்னையிலிருந்து, ஏர் இந்தியா மட்டுமே கோவாவிற்கு நேரிடையாக விமானத்தை இயக்குகிறது. மற்ற விமானங்கள் எல்லாம் பெங்களூர் அல்லது மும்பை வழியாகத்தான் செல்கின்றன. இதனால் பயண நேரம் குறைந்தது 4 முதல் 8 மணி நேரம் ஆகிறது. ஆனால் ஏர் இந்தியாவில் சென்றால் 1.10 மணிகளில் சென்றுவிடலாம்.

இந்த பயண அனுபவதை மேலும் பின்னர் பகிர்ந்து கொள்கிறேன்.