சமீபத்தில் படித்தது

Thursday, January 28, 2010

சமீபத்தில் படித்தது

சென்ற வாரம் ஒரு வாரப்பத்திரிக்கையில் படித்ததை பகிர்ந்துகொள்கிறேன். இது சிறந்த தலைவர்களுக்கு சரியான வாரிசு அமையாததை பற்றியது.

பெரியார் எவ்வளவு கடினமான பணிகளை இந்த சமுதாயத்திற்காக செய்தார் என்பது நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அவர் பட்ட கஷ்டங்கள் எல்லாம் என்ன ஆனது. அவருக்கு பின் அந்த இயக்கம் இருக்கிறதா? இருந்தால் ஏன் பெரிய அளவில் செயல்படவில்லை. தற்போது அந்த இயக்கம் என்னதான் செய்து கொண்டு இருக்கிறது.

காந்தியடிகளை பற்றி நாம் அனைவரும் அறிவோம். அவரது கருத்துக்களை கொண்டு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அவரது கருத்துக்களுக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறது. ஏன் காந்திக்கு பின் ஒருவரும் அவ்ருக்கு வாரிசு போல் வரவில்லை. அதாவது அவரது கருத்துக்களை அவர் போல் எடுத்து செல்ல ஏன் ஒருவரும் வரவில்லை?

புத்தர் புத்த மதத்தை நிறுவியவர் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.ஆனால் அவருக்கு பின் அவரது கருத்துக்களை மக்களுக்கு எடுத்து சொல்லவோ பரப்பவோ ஏன் ஒருவரும் வரவில்லை?

சாக்ரடீஸ்க்கு அரிஸ்டாட்டில் போல, லெனினுக்கு ஒரு ஸ்டாலின் போல ஏன் இவர்களுக்கு அமையவில்லை. ஒருவேளை அமைந்திருந்தால் இவர்களது கருத்துக்கள் மேலும் நிறைய மக்களுக்கு போய் சேர்ந்திருக்கும்.

இவ்விடத்தில் நாம் பெரியார் சொன்னதை தான் நினைவு படுத்திக்கொள்ள வேண்டும்.அவர் கூறியது " எனது கருத்துக்களை யாரும் மக்களிடம் எடுத்து செல்ல வேண்டியதில்லை.அதற்கு தகுதியான யாரையும் என்னால் அடையாளம் காண முடியவில்லை.மக்களுக்கு வேண்டியதை அடையாளம் கண்டு கொள்ளவேண்டியது அவர்களது வேலை. அதனை அவர்கள் தான் செய்ய வேண்டும்." இது எவ்வளவு தீர்க்க தரிசனம்.