வருகடலை -3

Sunday, October 9, 2011

இவர்கள் எல்லாம் இப்போது எங்கே இருக்கிறார்கள்? என்ன ஆனார்கள்?

1. ஹசன் அலி

http://thatstamil.oneindia.in/news/2011/03/10/hasan-ali-his-associates-tax-evasion-pegged-aid0091.html


2. சிவகாசி ஜெயலட்சுமி

http://thatstamil.oneindia.in/news/2004/09/24/jayalakshmi.html




3. தெல்கி

http://thatstamil.oneindia.in/news/2007/08/30/charges-filed-against-mohammed-ali-telgi-today.html



4.  முகமது அலி - முத்திரைத்தாள் மோசடி
http://www.koodal.com/news/tamilnadu.asp?id=9707&title=tamilnadu-news-headlines-in-tamil




4. சரவணபவன் அண்ணாச்சி

http://thatstamil.oneindia.in/news/2009/03/19/tn-rajagopal-get-life-sentence.html




5. கலைஞரை கைது செய்த முத்துக்கருப்பன்

http://www.tamilnadutalk.com/portal/index.php?/topic/5806-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/




உள்ளாட்சி தேர்தல்- October 2011

====================================

இந்த மாதம் தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. எப்படி என்கிறீர்களா? இந்த தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்தனியாக களம் இறங்குகின்றன. இதற்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டது கலைஞர் தான். காங்கிரஸ் கடசியை கழட்டி விடுவதற்கு இது நல்ல சந்தர்ப்பம், அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டார். கலைஞர் இதனை அறிவிக்கும் வரை தங்க பாலுவுக்கு தெரியாது. அவர் அறிவித்த பிறகு வேறு வழியில்லாமல் காங்கிரஸும் தனியாக போட்டியிடுவதாக அறிவித்தார்.

கலைஞர் இந்த முடிவை சென்ற தேர்தலிலேயே செய்திருந்தால் இன்னும் ஒன்று அல்லது இரண்டு சீட்டுகள் அதிகமாக வாங்கியிருப்பார். ஆனால் அவரை அந்த முடிவை எடுக்க முடியாமல் செய்வதற்காக தகுந்தவாறு அவரது மகள் கனிமொழியை கைது செய்து வைத்து இருந்தனர். அதனால் தான் இலங்கைத்தமிழருக்கு ஆதரவாக கூட அவரால் குரல் எழுப்ப முடியவில்லை. குடும்பமா அல்லது மக்களா என்பதில் மகளுக்கு முக்கியத்துவம் தந்ததால் மக்கள் அவரை ஓய்வு எடுக்கச்சொல்லி அனுப்பிவிட்டனர்.

ஆனால் இன்று காங்கிரஸ் தலைமைக்கு, தமிழ் நாட்டில் உள்ளாட்சி தேர்தல் என்று ஒன்று நடக்கிறதா என்று கூட தெரியாது. அதனால் கலைஞரின் இந்த முடிவை பற்றி அவர்கள் பெரியதாக கவலைப்பட்டதாக தெரியவில்லை. வேறு வழியில்லாமல் தமிழக காங்கிரஸும் தனியாக நிற்கிறது.

ஜெயலலிதாவும் தனியாக போட்டியிடுவதாக அறிவித்துவிட்டார். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடைசிவரை அவர் ஏதாவது தருவார் என்று காத்திருந்தனர். ஆனால் அவர் எதுவும் தராததால் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் விஜயகாந்துடன் சேர்ந்து கொண்டனர்.


இப்படிபட்ட நிலையில் வரும் உள்ளாட்சி தேர்தல் கண்டிப்பாக தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வு ஆகும்.