Friday, December 4, 2009

எனது அலுவலகத்தில் இன்று cubical decoration day.அதாவது வேலை செய்யும் இடத்தை decorate செய்வது. இதற்கு themes வேறு கொடுத்திருந்தார்கள்.

தமிழ்நாடு, ஆந்திரா,கேரளா மற்றும் கர்நாடகா என அழகுபடுத்த வேண்டும். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உங்களுக்காக:

தமிழ்நாடு:



ஆந்திரா






கேரளா:







கர்நாடகா:



சென்னையில் மழைக்காலம் -3

Thursday, December 3, 2009

சென்னையில் மழைக்காலம் பற்றி நாம் முன்பே நிறைய எழுதிவிட்டோம். மேலும் சில...

சென்னை அண்ணா யுனிவர்சிட்டி தாண்டி ராஜ்பவன் வரும் வழியில் சாலை போடுவதற்காக முன்பு இருந்த (நன்றாக) சாலையை அங்குமிங்குமாக கீறி விட்டிருந்தார்கள். இதனால் நன்றாக உள்ள சாலை திடீரென குழியாகும். இதனால் இரு சக்கர வாகனங்களுக்கு மிகவும் கஷ்டம்.

நேற்று அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தோம். இந்த இடத்திற்கு வந்தவுடன் மிகவும் டிராஃபிக் ஜாம். எங்களது டிரைவர் வண்டியை slow செய்து பார்த்தால், முன்பு ஒரு accident. அந்த இடத்தில் ஒரு இருசக்கர வாகனம் balance செய்ய முடியாமல் தடுமாற பின்னர் வந்த கார் sudden break போட அந்த காருக்கு பின்னால் வந்த கார் முன்னால் சென்ற காரின் பின்னால் மோதிவிட்டது.

இடித்த காரின் டிரைவர் எங்கள் டிரைவருக்கு தெரிந்தவர் என்பதால் எங்கள் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு அவருக்கு உதவ சென்றுவிட்டார். அதனால் நாங்களும் அரைமணி நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்தோம்.

அப்பொழுது மட்டும் அந்த இடத்தில் 4 அல்லது 5 பேர் விழுந்துவிட்டார்கள். சில பேருக்கு நல்ல அடி சிலபேருக்கு லேசான காயம். இந்த் சாலையின் நிலைமை கடந்த 4 முதல் 5 நாட்களாக இப்படியேதான் இருக்கிறது. யாரும் கண்டுகொள்ளவே இல்லை.

இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால் அங்கு ஒரு டிராஃபிக் போலிஸ்காரர் கூட இல்லை.

எங்களுக்கு முன்பு நிகழ்ந்த accidentல் இருவரும் சமரசம் ஆகாததால் இவர்களே டிராஃபிக் போலீஸ்க்கு தகவல் சொல்லி அவர்கள் அரைமணி நேரம் கழித்து வந்து இருவரிடமும் தலா ஆயிரம் ரூபாய் வாங்கிகொண்டு சமாதானப்படுதினார்களாம். இதனை எங்கள் டிரைவர் இன்று கூறினார்.

மேலும் எங்களுடன் வேலை பார்பவரும் அதே இடத்தில் விழுந்து, காலில் hair line crack ஆகி வீட்டில் ஓய்வாக இருக்கிறார். அதனால் அந்த சாலையில் செல்பவர்கள் மிக கவனமாக செல்லவும்.