கோவா பயணம் -2

Saturday, November 7, 2009

முந்தைய பதிவில் கோவா பயண அனுபவங்களை முழுமையாக பகிர்ந்துகொள்ள முடியவில்லை. அதனால் இப்பொழுது தொடர்கிறேன்.

அலுவலகத்திலிருந்து நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் 1 வாரம் பயணம் மேற்கொள்ளலாம் என முடிவானது. குடும்பத்துடன் செல்வதாலும் அனைவருக்கும் 3 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இருப்பதாலும் பயணம் செல்லும் இடத்தை கவனத்துடன் தேர்ந்தெடுக்க வேண்டி இருந்தது.

முதலில் மலேசியா செல்லலாம் என நினைத்தோம். இங்கு ஒன்றை நான் குறிப்பிட வேண்டும். பல வலையதளங்கள் சுற்றுலாவுக்கென்றே உள்ளன. அவை பல சலுகைகளை வழங்குகின்றன. அப்படி நாங்கள் பயன்படுத்திக்கொண்டது யாட்ரா(www.yatra.com). இவர்கள் ஹோட்டல்களோ அல்லது விமான நிறுவனங்களிடமோ முன்கூட்டியே குறைந்த செலவில் பதிவு செய்து வைத்துக்கொள்கிறார்கள். அவற்றை நமக்கு அந்நிறுவனம் அளிக்கும் விலையைவிட குறைந்த செலவில் வழங்குகிறார்கள். ஆனால் இவை பொதுவாக offseason சமயங்களுக்கு தான் உள்ளது.

இவ்வாறு நாங்கள் பயணம் செய்ய யாட்ராவை தொடர்பு கொண்டோம். அவர்கள் முதலில் மலேசிய பயணத்திற்கு சொன்னார்கள். அது நல்ல ஆபராக இருந்தது. ஆனால் உடனடியாக செல்ல வேண்டியிருந்தது. மற்றும் எங்கள் குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் இல்லாததால் அதனை தவிர்க்க் வேண்டியாகிவிட்டது. ஒரு வழியாக இந்தியாவிற்குள்ளேயே செல்வது என முடிவானது. குலுமனாலி தொடங்கி அந்தமான் நிக்கோபார் வரை அலசினோம். குலுவில் அப்பொழுது குளிர் சீசன். அதனால் குழந்தைகளை அழைத்து செல்ல முடியாது. இப்படியாக அலசி கடைசியில் கோவா செல்வது என ஒரு மனதாக முடிவானது.

கோவா செல்வதானால் எப்படி செல்லலாம் என பார்த்தோம். சென்னையில் இருந்து கோவாவிற்கு நேரிடையாக இரயில் போக்குவரத்து உள்ளது. ஆனால் அது வாரத்திற்கு ஒரு முறை தான் உள்ளது. பெங்களூரு சென்று கோவா செல்லலாம் என்றால் பெங்களூர் சென்று 6 மணி நேரம் காத்திருந்து செல்ல வேண்டியிருக்கிறது. சரி மங்களூர் சென்று செல்லலாம் மேலும் அது மேற்கு கடற்கரை வழியாக செல்லும். பார்த்து அனுபவிக்க வேண்டியது என்றால் அந்த வழியாக சென்றால் 2 இரவுகள் இரயிலில் குழந்தைகளை வைத்து இருக்க வேண்டும். அதனால் விமானம் மூலம் செல்லலாம் என முடிவெடுத்தோம்.

விமான பயண கட்டணம், எவ்வளவு காலம் முன்னதாக பயணம் செய்கிறோம் என்பதை பொறுத்து மாறிக்கொண்டிருக்கும். நாங்கள் 1 வாரத்தில் பயணம் செல்வதாக முடிவெடுத்தால் அந்த சலுகைகளை பயன்படுத்த முடியவில்லை. மேலும் சென்னையில் இருந்து நேரிடையாக விமான போக்குவரத்து ஏர் இந்தியா மட்டுமே கொடுத்தது மற்றவற்றில் இல்லை. மேலும் அதில் பயண கட்டணம் 2,000 மட்டுமே. மற்ற தனியார் விமானங்களில் சென்னையிலிருந்து பெங்களூர் அல்லது மும்பை சென்று அங்கிருந்து கோவா செல்ல வேண்டும். அதற்கு இரண்டு பயணம் செய்ய வேண்டும் மற்றும் இரண்டு டிக்கெட் வாங்கவேண்டும். பயன நேரமும் 6 மணி நேரத்திற்கு மேல். ஆனால் ஏர் இந்தியாவில் 1 மணி நேரத்தில் கோவாவில் விட்டுவிடுகிறார்கள். இந்த 2,000 ரூபாய் டிக்கெட் மிக குறைந்த அளவே கொடுக்கிறார்கள். மற்றவை எல்லாம் 4000 ரூபாய்க்கு மேல்.

இப்படி போக வர விமான டிக்கெட் பதிவு செய்து கொண்டோம். அடுத்து தங்க ஏற்பாடு செய்ய வேண்டி இருந்தது. இதற்கு நான் முன்னரே சொல்லியது போல் யாட்ராவை பயன்படுத்திக்கொண்டோம். அவர்கள் ஒரு 4 ஸ்டார் ஹோட்டலை ஒரு நாளைக்கு 1200 ரூபாய்க்கு பதிவு செய்து கொடுப்பதாக சொன்னார்கள். உடனே நாங்கள் அந்த ஹோட்டலுக்கே நேரிடையாக தொலைபேசியில் பேசி கட்டணத்தை விசாரித்தோம். அவர்கள் அதே ரூமை 5500 ரூபாய் என்றார்கள். யாட்ரா கூறிய விலையை அவர்களிடம் சொன்னபோது அவர்கள் கூறியதுதான் நான் மேலே சொன்னது. சரி என்று யாட்ராவை மீண்டும் தொடர்புகொண்டால் அதற்குள் ரூம் புக் ஆகிவிட்டதாக சொன்னார்கள். 3 நாட்களுக்கு மட்டுமே காலியாக உள்ளதாகவும் மேலும் 3 நாட்களுக்கு வேறு ஒரு ஹோட்டலில் பதிவு செய்து கொடுப்பதாக சொன்னார்கள். சரி என்று பதிவு செய்தோம்.

கோவா பயண அனுபவத்தை தொடர்கிறேன்...............

6 comments:

Anonymous said...

*******
சரி என்று யாட்ராவை மீண்டும் தொடர்புகொண்டால் அதற்குள் ரூம் புக் ஆகிவிட்டதாக சொன்னார்கள்
********
என்னங்க குழப்பம் இது?

ஓர் உண்மைத்தமிழன் said...

*******
சரி என்று யாட்ராவை மீண்டும் தொடர்புகொண்டால் அதற்குள் ரூம் புக் ஆகிவிட்டதாக சொன்னார்கள்
********
என்னங்க குழப்பம் இது?
********************
தவறுதான்..நான் சரியாக தெரிவிக்காமல் விட்டுவிட்டேன்.ஏர் இந்தியாவின் இந்த 2000 ரூபாய் டிக்கெட் யாட்ராவின் சலுகை கட்டணத்தைவிட மிக குறைவு.ஆனால் மிக குறைந்த அளவே கொடுக்கிறார்கள்.
தங்களது கருத்திற்கு நன்றி..

--- ஓர் உண்மைத்தமிழன்

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

சு. க்ருபா ஷங்கர்` said...

இவ்வளோ விஷயம் நடந்துருக்கா.... :-)

ஓர் உண்மைத்தமிழன் said...

தங்கள் வருகைக்கு நன்றி க்ருபா ஷங்கர் அவர்களே!!!

நிகழ்காலத்தில்... said...

அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்.

வாழ்த்துக்கள்

kindly remove word verification in comments

Rajkumar said...

தங்கள் வருகைக்கு நன்றி...word verificationஐ கண்டிப்பாக நீக்கிவிடுகிறேன்.