தமிழ் படம்
இப்படி ஓர் படத்தை மணம் விட்டு சிரித்து பார்த்து,நெடுநாட்கள் ஆகிறது. அதற்காகவே முதலில் ஓர் பாராட்டு..
படத்தின் ஒவ்வொரு பகுதியாக பார்ப்போம்.
1.கதை
2.பாடல்கள் -இசை,ஒளிப்பதிவு & மற்றவை
3.ஹீரோ,ஹீரோயின் & மற்றவர்கள்
1.கதை: சிறிய வயதில் கள்ளிப்பால் ஊற்றி கொல்லப்படுவதிலிருந்து தப்பித்து சென்னை வந்து பெரிய ஆளாகி,பெற்றோரை கண்டுபிடித்து அவர்களுடன் சேர்ந்து,ஹீரோயின் தந்தையுடன் சவால் விட்டு வெற்றிபெறுவது தான் கதை.
தமிழ் படங்களை கிண்டல் செய்வது என்று முடிவு செய்துவிட்டுதான் கதை எழுதவே ஆரம்பித்திருக்கிறார்கள்.கிண்டல் செய்வதற்கு தேவையானவாறு கதையை கொண்டு சென்றிருக்கிறார்கள்.முதல் பாதி மிக நன்றாக இருக்கிறது.இரண்டாவது பாதி சற்று வழுக்கிவிட்டது.
கள்ளிப்பால் கொடுப்பதில் கருத்தம்மாவை கிண்டல் பண்ண ஆரம்பிக்கிறார்கள்.ஹீரோ சிறியவனாக இருக்கும் போது அக்கிரமத்தை பார்த்து பொங்கிஎழுந்து,பாட்டியிடம் நான் எப்ப பெரியவனாய் இதை தட்டிக்கேட்பது என்கிறான்.அதற்கு பாட்டி, போய் சைக்கிள் வீல்-லை மிதி தமிழ் சினிமா ஹீரோ போல் உடனே பெரியவனாகிவிடுவாய் என்கிறார்.உடனே அதேபோல அவனும் பெரியவனாகி எல்லோரையும் அடித்துவிரட்டுகிறான்.உடனே ஹீரோவுக்கு கட்-அவுட் வைத்து பாலபிசேகம் செய்கின்றனர்.
ஹீரோயினின் அப்பா அவளை ஒரு பணக்காரனுக்கு தான் கட்டிவைப்பேன் என்கிறார்.உடனே அவரைவிட பணக்காரனாக ஆவதாக சவால்விட்டு செல்கிறான்.ஹீரோயின் அப்பா ஹீரோ சென்றவுடன் வேலைக்காரனிடம் காபி கொண்டுவரசொல்கிறார்.ஹீரோ அதற்குள் ஒரு பாட்டுபாடி கோடீஸ்வரனாகி ஹீரோயின் வீட்டிற்கு வருகிறான்.ஹீரோயின் அப்பா ஹீரோவை பார்த்து "காபி வருவதற்குள் எப்படி?" என்பது நச்..
வில்லன்களை கொலை செய்வதற்கு இவர் பயன்படுத்தும் வழிமுறைகள்,ஹீரோயினை அசத்த ஒரே இரவில் பரதநாட்டியம் கற்று அவள் வீட்டில் பரதம் ஆடி அவளது முகத்தை வரைவது,இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.ரஜினி தொடங்கி விஜயகாந்த்,விஜய்,அஜீத், சூர்யா,சிம்பு என அனைவரையும் கிண்டலடிதிருக்கிறார்கள்.
2.பாடல்கள்-இசை-ஒளிப்பதிவு.
பாடல்களும் தமிழ் படபாடல்களை கிண்டல் செய்து எடுத்திருக்கிறார்கள்.அதனால் இசையமைப்பாளருக்கு பெரிய வேலையில்லை.ஆனாலும் பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. அதிலும் குறிப்பாக பச்சை,மஞ்சள்,கருப்பு தமிழன் பாடலை கேட்டால் எந்த ஹீரோவும் இனிமேல் ஓப்பனிங்க் பாடலே வேண்டாம் என்பர். ஓ மக சீயா பாடல் இதுவரை வந்த தமிழ்படங்களில் வந்த அர்த்தமில்லாத வார்த்தைகளை கொண்டு எழுதியிருக்கிறார்கள்.மிக நன்றாக உள்ளது.கஸ்தூரி கவர்ச்சிக்கு நான் மீண்டும் ரெடி என ஒரு பாடலில் மிரட்டி உள்ளார்.
கேமிரா மிக நன்றாக உள்ளது.சண்டை மற்றும் பாடல்கள் ஒளிப்பதிவு நன்றாக வந்துள்ளது.
3.ஹீரோ , ஹீரோயின் & மற்றவர்கள்
சிவா இந்த பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.எல்லா ஹீரோக்களையும் நன்றாக கிண்டலடித்திருக்கிறார். தமிழ் படங்களை போலவே இதிலும் ஹீரோயின் பாடலுக்கும்,காதல் காட்சிக்கு மட்டுமே வந்து போகிறார்.
ஹீரோ நண்பர்களாக வரும் வெண்ணிற ஆடைமூர்த்தி, பாஸ்கர், மனோபாலா கலக்கியிருக்கிறார்கள்.மூர்த்தி - டபுள் மீனிங்கில் பேசும்போது எல்லாம் காக்கா வந்து கொத்துகிறது.பாட்டி,டில்லி கணேஷ்,CBI ஆபிஸர் என அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.
மொத்ததில் பார்த்து ரசிக்க வேண்டிய படம்.
Rating :***1/2
Subscribe to:
Posts (Atom)