கடைகளில் பிளாஸ்டிக் பைகளை பற்றி மத்திய அரசின் முடிவு

Tuesday, September 13, 2011

கடைகளில் பிளாஸ்டிக் பைகளை பற்றி மத்திய அரசின் முடிவு




சென்ற இரு வாரங்களுக்கு முன்பு எல்லோரும் பத்திரிக்கைகளில் ஒரு விளம்பரத்தை பார்த்திருப்போம். அது மத்திய அரசின் முடிவின் காரணமாக இனி கடைகளில் பிளாஸ்டிக் பைகள் வழங்கப்படமாட்டாது என்று. வாடிக்கையாளர்கள் தங்களது பொருட்களை எடுத்து செல்ல தாங்களே பைகளை கொண்டுவர வேண்டும் இல்லை கடைகளில் வாங்கினால் அதற்கு தனியாக பணம் கொடுத்து வாங்க வேண்டும்.



கடைகளில் இது வரை இலவசமாக கொடுத்து கொண்டு இருந்த பைகளுக்கும் இப்பொழுது பணம் வாங்கத் துவங்கிவிட்டார்கள். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றால் அதற்கு பதிலாக பேப்பர் பைகளை கடைகள் கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருந்தால் பரவாயில்லை அதை விட்டுவிட்டு அதற்கு பணம் வசூலிக்க வேண்டும் என்று சொல்லி இருப்பது சுத்த மடத்தனம்.



இது பெரிய வர்த்தக நிருவணங்களிடமிருந்து வேண்டியதை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு சாதகமாக சொல்லி இருப்பதையே காட்டுகிறது. சென்ற வாரம் ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ் சென்று இருந்தேன். பொருட்களை வாங்கிவிட்டு பை இருக்கிறதா என்றார்கள்? இல்லை என்றதும் பைக்கு 10 ரூபாய் வேண்டுமா என்கிறார்கள். இது பகல் கொள்ளை. பணம் கொடுத்து வாங்கும் பையில் அவர்களது விளம்பரம் வேறு. பெரிதாக பெயரை போட்டுக்கொண்டுள்ளார்கள்.



இதனை பற்றி எங்கும் எதிர்பே வரவில்லை..மக்கள் ஏற்றுக் கொண்டார்களா? உங்களின் கருத்துக்களை தெரிவிக்கவும்.

வருகடலை-1

Friday, September 9, 2011


ஓணம் வாழ்த்துக்கள்

இன்று மலையாள மற்றும் ஓணம் கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய ஓணம் தின வாழ்த்துக்கள். இந்த நாளைப்போலவே இனி வரும் நாட்களும் இனிய நாளாக வாழ்த்துக்கள்.
எனது அலுவலகத்தில் சென்ற வாரமே ஓணம் கொண்டாடிவிட்டார்கள். தமிழக அரசு இன்று விடுமுறை அறிவித்துள்ளது. அதற்கு பதில் நாளை வேலை நாளாக அறிவித்துள்ளது. வெளி ஊர்களுக்கு செல்வர்கள் எப்படி இந்த விடுமுறை உதவும். அதற்கு பதில் அடுத்த சனிக்கிழமை வேலை நாளாக அறிவித்து இருக்கலாம்.

காந்திமதி மரணமடைந்தார்


இனிய நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகை காந்திமதி புற்று நோயுக்கு சிகிச்சை எடுத்தும் பலனில்லாமல் மரணமடைந்ததாக படித்து அறிந்தேன். மிகவும் வருத்தமாக இருக்கிறது.


இவரது குரலே தனிரகம். எளிதில் அடையாளம் அறிந்துகொள்ள முடியும். சாதாரணமாக கதாநாயகர்களின் குரலே சினிமாவில் பிரபலமாக இருக்கும். ஆனால் அதையும் மீறி இவர் புகழ் பெற்றது பெரிய விசயம்.

மாங்காடு கோவில்

இன்று வெளியில் சென்று விட்டு மாங்காடு கருமாரியமண் கோவிலுக்கு சென்றிருந்தோம். நாங்கள் சென்றது இரவு 8 மணிக்கு அதனால் கூட்டமே இல்லை. அதனால் பொது தரிசனத்தில் சாமி பார்க்கலாம் என பார்த்தால், பொது தரிசனத்திற்கு கோவிலின் பின் பக்கதில் இருந்து வரிசையில் வர வேண்டுமாம். 20,50 ரூபாய் தரிசனத்திற்கு வாசல் அருகில் உள்ள வழியாகவே செல்லலாமாம். பொது தரிசன வரிசைக்கு விளக்கு வெளிச்சம் இல்லை, காற்றோட்டம் இல்லை ஆனால் மற்ற வரிசைக்கு ஃபேன் உள்ளது, நல்ல வெளிச்சம் உள்ளது. இது என்ன கொடுமையோ தெரியவில்லை.


தமிழ் நாடு மற்றும் ஆந்திராவில் உள்ள கோவில்களில் தான் இப்படி எல்லாம். குறிப்பாக திருப்பதி கோவிலில் கூட்டம் இல்லாவிட்டால் கூட்டம் சேரும் வரை உள்ளே ஏதோ பூஜை நடப்பதாக அனைவரையும் வரிசையில் காக்க வைத்து விடுவார்கள். அப்படி கஷ்டப்பட்டு சாமியை மனநிறைவுடன் பார்க்க இயலாது. 10,20 வினாடிகளில் வெளியே அனுப்பிவிடுவார்கள்.

அதுவே கேரளாவில் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலாகட்டும், சபரிமலை ஆகட்டும் பணம் கொடுத்து வித்தியாசமாக சாமியை பார்க்க முடியாது. யாராக இருந்தாலும் அனைவரும் கடவுளுக்கு முன் சமமாக இருப்பர்.

இது எப்பொழுது தான் மாறுமோ தெரியவில்லை....அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்......

ஷில்பா ராமம் - ஹைதராபாத்

ஷில்பா ராமம் - ஹைதராபாத்




அலுவலக வேலையாக 2 மாதத்திற்கு முன்பு ஹைதராபாத் சென்றிருந்தேன். அப்பொழுது ஒரு நாள் மாலை நேரம் எங்காவது வெளியே செல்லலாம் என அங்கு உள்ளவர்களை கேட்டால், நான் தங்கியிருந்ததிற்கு அருகில் இந்த ஷில்பா ராமம் எனும் பார்க் உள்ளது என்றனர். சரி போய் பார்ப்போமே என அங்கு சென்றேன். எவ்வளவு நுணுக்கமான் வேலைப்பாடுகள் , அங்கு உள்ளவற்றை பார்த்தால் நிஜ மனிதர்களை பார்பது போலவே உள்ளது.



ஹைதராபாத் செல்பவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம். தவறாமல் பார்க்கவும்.



உங்களுக்காக சில புகைப்படங்கள்:
 

உண்ணவிரததில் விஜய்

Friday, August 26, 2011

அன்னா ஹ்சாரே உடன் விஜய் உண்ணவிரததில் கலந்து கொண்டதால் மத்திய அரசு பயந்து லோாக் பால் மசோதாவுக்கு அனுமதி கொதுத்துவிடும். இல்லை என்றால் அவரது சிவகாசி, வேட்டைக்காரன் போன்ற அரிய படங்களை பார்க்க அவர்கள் நிர்பந்திக்கப்பதுவார்கள்.  அதற்கும் ம்த்திய அரசு மசியவில்லை என்றால், எங்கள் தானைத் த்லைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு ம்த்திய அரசை மிரட்டுவார்.