ஜெயலலிதாவுக்கு தெரியுமா - தமிழ் நாட்டில் தொடர் கொலை, கொள்ளை நடப்பது?

Wednesday, September 14, 2011

ஜெயலலிதாவுக்கு தெரியுமா - தமிழ் நாட்டில் தொடர் கொலை, கொள்ளை நடப்பது?
ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்ற ஒரு வாரத்தில் "தமிழ் நாட்டில் இனி ரவுடிகளின் தொல்லையே இருக்காது. நாங்கள் ஆட்சி பொறுப்பேற்றவுடன் அவர்கள் எல்லாம் ஆந்திராவுக்கு ஓடிவிட்டனர் என்றார். ஏதோ இவரிடமோ அல்லது இவரது அரசுக்கு சொல்லிவிட்டு அவர்கள் சென்றது போல்.ஆனால் இப்பொழுது நடப்பதோ முற்றிலும் நேர் மாறாக உள்ளது. ஏகப்பட்ட கொள்ளைகள், கொலைகள். நேற்று பரமக்குடியில் போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலி. நேற்று கொள்ளையர்களால் சென்னையில் நடிகை விசித்ராவின் தந்தை கொல்லப்பட்டிருக்கிறார். இது போன்றவற்றிக்கு ஜெயலலிதா பொறுப்பேற்க வேண்டும்.இதனை தட்டிக்கேட்க வேண்டிய எதிர் கட்சி இருக்கிறதா என்றே தெரியவில்லை? சட்டசபையில் , பன்ருட்டி எம்.ஜி.ஆர் பாடல் பாடி கை தட்டு வாங்கி கொண்டு இருக்கிறார். இதற்காகவா இவர்களை மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்? இதனை நினைதால் வேதனையாக இருக்கிறது.சென்ற ஆட்சியில் காங்கிரஸ் இது போல் தான் செயல் படாமல் இருந்ததால் இன்று இருக்கும் இடமே தெரியவில்லை. தி.மு.க. வும் ஆட்சியை இழந்திருக்கிறது. இதனை எல்லாம் ஜெயலலிதா கவனத்தில் கொள்ள வேண்டும்.

0 comments: