Friday, December 4, 2009

எனது அலுவலகத்தில் இன்று cubical decoration day.அதாவது வேலை செய்யும் இடத்தை decorate செய்வது. இதற்கு themes வேறு கொடுத்திருந்தார்கள்.

தமிழ்நாடு, ஆந்திரா,கேரளா மற்றும் கர்நாடகா என அழகுபடுத்த வேண்டும். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உங்களுக்காக:

தமிழ்நாடு:



ஆந்திரா






கேரளா:







கர்நாடகா:



சென்னையில் மழைக்காலம் -3

Thursday, December 3, 2009

சென்னையில் மழைக்காலம் பற்றி நாம் முன்பே நிறைய எழுதிவிட்டோம். மேலும் சில...

சென்னை அண்ணா யுனிவர்சிட்டி தாண்டி ராஜ்பவன் வரும் வழியில் சாலை போடுவதற்காக முன்பு இருந்த (நன்றாக) சாலையை அங்குமிங்குமாக கீறி விட்டிருந்தார்கள். இதனால் நன்றாக உள்ள சாலை திடீரென குழியாகும். இதனால் இரு சக்கர வாகனங்களுக்கு மிகவும் கஷ்டம்.

நேற்று அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தோம். இந்த இடத்திற்கு வந்தவுடன் மிகவும் டிராஃபிக் ஜாம். எங்களது டிரைவர் வண்டியை slow செய்து பார்த்தால், முன்பு ஒரு accident. அந்த இடத்தில் ஒரு இருசக்கர வாகனம் balance செய்ய முடியாமல் தடுமாற பின்னர் வந்த கார் sudden break போட அந்த காருக்கு பின்னால் வந்த கார் முன்னால் சென்ற காரின் பின்னால் மோதிவிட்டது.

இடித்த காரின் டிரைவர் எங்கள் டிரைவருக்கு தெரிந்தவர் என்பதால் எங்கள் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு அவருக்கு உதவ சென்றுவிட்டார். அதனால் நாங்களும் அரைமணி நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்தோம்.

அப்பொழுது மட்டும் அந்த இடத்தில் 4 அல்லது 5 பேர் விழுந்துவிட்டார்கள். சில பேருக்கு நல்ல அடி சிலபேருக்கு லேசான காயம். இந்த் சாலையின் நிலைமை கடந்த 4 முதல் 5 நாட்களாக இப்படியேதான் இருக்கிறது. யாரும் கண்டுகொள்ளவே இல்லை.

இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால் அங்கு ஒரு டிராஃபிக் போலிஸ்காரர் கூட இல்லை.

எங்களுக்கு முன்பு நிகழ்ந்த accidentல் இருவரும் சமரசம் ஆகாததால் இவர்களே டிராஃபிக் போலீஸ்க்கு தகவல் சொல்லி அவர்கள் அரைமணி நேரம் கழித்து வந்து இருவரிடமும் தலா ஆயிரம் ரூபாய் வாங்கிகொண்டு சமாதானப்படுதினார்களாம். இதனை எங்கள் டிரைவர் இன்று கூறினார்.

மேலும் எங்களுடன் வேலை பார்பவரும் அதே இடத்தில் விழுந்து, காலில் hair line crack ஆகி வீட்டில் ஓய்வாக இருக்கிறார். அதனால் அந்த சாலையில் செல்பவர்கள் மிக கவனமாக செல்லவும்.

வோடாபோன் வழங்கும் சலுகைகள்

Thursday, November 19, 2009



சென்னை மற்றும் இந்திய மெட்ரோ நகரங்களுக்கு, வோடாபோன் சில சலுகைகளை வழங்குகிறது.

திரைப்படத்திற்கு ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம்.ஆனால் இது சத்யம் சினிமாவளாகத்திற்கு மட்டும்தான்.

மேலும் சில உணவகங்களில் 20% முதல் 30% வரை தள்ளுபடி இப்படி..

இந்த சலுகையை அறிந்தவர்கள் மட்டுமே பயன்படுத்திக்கொள்கிறார்கள். மற்றவர்களும் பயன்படுத்தட்டுமே என்றுதான் இதனை தெரியப்படுத்துகின்றேன்.

சினிமா டிக்கெட் பெறுவதற்கு 56789 என்ற எண்ணுக்கு உங்கள் வோடாபோன் எண்ணிலிருந்து TUESDAY M என்று SMS அனுப்பவும்.

மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட முகவரியை பார்க்கவும்.



சச்சின் ஓர் சகாப்தம்

Sunday, November 15, 2009

இன்றுடன் சச்சின் கிரிக்கெட் வரலாற்றில் அடியெடுத்து வைத்து 20 ஆண்டுகள் முடிந்து விட்டது. அவரது சாதனைகளை முறியடிப்பது என்பது தற்காலத்தில் இயலாத காரியம்.
சச்சினின் சரித்திரம்
முழுப்பெயர் : சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்
பிறந்தது : ஏப்ரல் 24, 1973 மும்பை (பழைய பம்பாய்).
முதல் ஆட்டம் : பாகிஸ்தானுக்கு எதிராக 1989/90.
ஆட்ட நாயகன் விருது: 72 முறை.


டெஸ்ட்டில் பேட்டிங் & பீள்டிங்

MINORUNSHSAve10050SRateCt
இந்தியாவில்159261271277324854.59425354.27102
அனைத்துமாக159261271277324854.59425354.27102
ஸ்டில் பந்து வீச்சு
BallsMdnsRunsWktsBBAve5wI10wMSRateEcon
இந்தியாவில்3930802272443-1051.640089.323.47
அனைத்துமாக3930802272443-1051.640089.323.47

ஒரு நாள் போட்டியில் பேட்டிங் & பீள்டிங்

MINORUNSHSAve10050SRateCt
இந்தியாவில்436425391717818644.50459185.80132
அனைத்துமாக436425391717818644.50459185.80132

ஒரு நாள் போட்டியில் பந்து வீச்சு

BallsMdnsRunsWktsBBAve4wI5wISRateEcon
இந்தியாவில்80062468171545-3244.274251.995.11
அனைத்துமாக80062468171545-3244.274251.995.11

20-20 ஆட்டத்தில் பந்து வீச்சு & பேட்டிங்

MINORUNSHSAve10050SRateCt
அனைத்துமாக11-101010.00--83.331

20-20 ஆட்டத்தில் பந்து வீச்சு

BallsMdnsRunsWktsBBAve4wI5wISRateEcon
அனைத்துமாக1401211-1212.00--145.22

நன்றி: www.cricketnext.in.com

குழந்தைகள் தினம்

Saturday, November 14, 2009


இந்தியர் அனைவருக்கும் குழந்தைகள் தினம் என்பது நவம்பர் 14 என்று நன்றாக தெரியும். ஆனால் உலகம் முழுவதும் குழந்தைகள் தினத்தை நவம்பர் 14 ம் தேதி தான் கொண்டாடுவதாக பலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

முதலில் உலக குழந்தைகள் தினமே நவம்பர் 14 கிடையாது. உலக குழந்தைகள் தினம் என்பது ஜுன் 1ம் தேதி. ஏன் ஜூன் 1ம் தேதி அன்று உலக குழந்தைகள் தினம் கொண்டாடுகிறார்கள் என எனக்கு தெரியவில்லை. ஒரு வேளை நமது இந்திய குழந்தைகளுக்கு மே மாதம் விடுமுறைகள் முடிந்து ஜூன் மாதத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பதால் இருக்கலாம். உலக குழந்தைகள் தினம் 1955ம் ஆண்டு முதல் தான் கொண்டாட தொடங்கியிருக்கிறார்கள்.

இதுபோலவே பிரபஞ்ச(Universal) குழந்தைகள் தினம் நவம்பர் 20ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது.நாம் தான் நேரு மாமாவின் பிறந்த நாளான இன்று(14 Nov) இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம்.