நீண்ட நாட்கள் ஆகிறது தமிழில் எழுதி. எதைப்பற்றி எழுதுவது என்றே தெரியவில்லை. அவ்வளவு விஷயங்கள் உள்ளது.
இமயம் தொலைகாட்சியில் (அரசியலில்) திடீர் என்று வைகோ ஹீரோ ஆனார். ஆனால் உண்மையில் ஜீரோ தான் ஆனார். ஜெயலலிதாவின் உண்மையான முகம் சிறிது வெளியே தெரிந்தது. வைகோவை பார்பதற்கு மிகவும் வருத்தமாக இருந்தது. மனம் விட்டு பேசினார்.
ஆனாலும் வேறு வழியில்லை. சிறிது காலம் வேண்டுமானால் தனியே இருக்கலாம்.செலவு செய்ய பணம் வேண்டும். அதற்காக ஏதாவது பெரிய கட்சியுடன் சேர்ந்து தான் ஆகவேண்டும்.
அது திமுக அல்லது அதிமுக அல்லது காங்கரஸ் அல்லது பிஜேபி ஆக இருக்கலாம். இல்லை என்றால் கட்சியை கலைத்து விட்டு தேர்தலில் போட்டியிடாமல் சேவை நிறுவனமாக அல்லது தி.க. போன்று மாறிவிட வேண்டும்.
வை.கோ. நல்ல பண்பாளர், நல்ல அறிவாளி, நல்ல குணம் உள்ளவர். ஆனால் நல்ல தலைவர் இல்லை. ஒரு முடிவு எடுக்கும் இடத்தில் உள்ள தலைவன் உணர்ச்சி வசப்பட மாட்டன். உணர்ச்சி வசப்படுபவனால் நல்ல முடிவு எடுக்க முடியாது.
சென்ற தேர்தலில் திமுகவை விட்டு வெளியே வந்து தனியாக நின்றிந்தால் அவருக்கான மரியாதையை இருந்திருக்கும். ஆனால் அதை விடுத்து அவரை ஒன்றரை வருடம் சிறையில் வைத்த ஜெயலலிதாவுடன் சேர வேண்டும் என்று அவரது கட்சியின் மற்ற தலைவர்களும் தொண்டர்களும் சொன்னதால் சேர்ந்தார். அன்று சொன்ன எவரும் இன்று அவருடன் இல்லை. இது தான் அவருக்கு பிரச்னை.
நேற்று வந்து கட்சி ஆரம்பித்த விஜயகாந்துக்கு இருக்கும் முக்கியத்துவம் இவருக்கு இவரது கட்சியிலேயே இருக்குமா என்பது சந்தேகமே!.
இன்று அதிமுக அல்லது திமுகவுக்கு மாற்றாக ஒரு வெற்றிடம் உள்ளது. அதனை யாராவது சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதனை விஜயகாந்த் பயன்படுத்தினார் ஆனால் அதிமுகவுடன் இணைந்துவிட்டார். எனவே அதனை வைகோ சரியாக பயன் படுத்தினால் நல்லது.
0 comments:
Post a Comment