இந்தியா பாகிஸ்தான் - கிரிக்கெட்

Wednesday, March 30, 2011

கிரிக்கெட் - இன்று பாகிஸ்தான் இந்தியா அரை இறுதி ஆட்டம். இதனால் இந்தியாவில் பல கம்பெனிகள் மதியம் விடுமுறை விட்டு விட்டன. அனால் எங்களுக்கு விடுமுறை இல்லை(மிக வருத்தம்).

இதுவரை இந்தியா பாகிஸ்தானுடன் உலக கோப்பை போட்டிகளில் தோற்றதே இல்லை. அந்த வெற்றி இன்றும் தொடர வேண்டும்.

இப்பொழுதே நிறைய நம்பிக்கைகள். எனது நண்பர் ஒருவர் சொன்னார், டோனி லீக் ஆட்டங்களில் டிரா   செய்தால் அந்த கோப்பையை கண்டிப்பாக வென்று விடுவார் என்று. அது உண்மையும் கூட. இதற்க்கு முன்னர் இப்படித்தான் நிகழ்ந்தது. அதே போல் இந்த முறையும் இங்கிலாந்த் உடன் லீக் போட்டியில் டிரா செய்தது. எனவே இந்த முறையும் வெல்லும்.

மேலும் பாகிஸ்தான் அணி முக்கியமான வீரர்கள் இல்லாமல் இந்த முறை வந்துள்ளது. இந்திய வீரர்கள், ஆட்ட மைதானம், ரசிகர்கள், பருவ சூழ்நிலைகள்  என அனைத்தும் நமக்கு சாதகமாக உள்ளது.  எனவே இந்த அணியை இந்த முறை வெல்லவில்லை என்றால், இது போன்ற சாதகமான தருணம் மீண்டும் கிடைப்பது கடினம். எனவே தோனி தலைமயில் நமது அணியினர் நன்கு விளையாடி கோப்பை வெல்ல வேண்டும். அதற்க்கு நாமும் நமது வாழ்த்துகளை தெரிவித்து வைப்போம்.
இரு அணிகளின் ஒப்பீடு


ரசிகர்கள் 0 comments: