வருகடலை-1

Friday, September 9, 2011


ஓணம் வாழ்த்துக்கள்

இன்று மலையாள மற்றும் ஓணம் கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய ஓணம் தின வாழ்த்துக்கள். இந்த நாளைப்போலவே இனி வரும் நாட்களும் இனிய நாளாக வாழ்த்துக்கள்.
எனது அலுவலகத்தில் சென்ற வாரமே ஓணம் கொண்டாடிவிட்டார்கள். தமிழக அரசு இன்று விடுமுறை அறிவித்துள்ளது. அதற்கு பதில் நாளை வேலை நாளாக அறிவித்துள்ளது. வெளி ஊர்களுக்கு செல்வர்கள் எப்படி இந்த விடுமுறை உதவும். அதற்கு பதில் அடுத்த சனிக்கிழமை வேலை நாளாக அறிவித்து இருக்கலாம்.

காந்திமதி மரணமடைந்தார்


இனிய நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகை காந்திமதி புற்று நோயுக்கு சிகிச்சை எடுத்தும் பலனில்லாமல் மரணமடைந்ததாக படித்து அறிந்தேன். மிகவும் வருத்தமாக இருக்கிறது.


இவரது குரலே தனிரகம். எளிதில் அடையாளம் அறிந்துகொள்ள முடியும். சாதாரணமாக கதாநாயகர்களின் குரலே சினிமாவில் பிரபலமாக இருக்கும். ஆனால் அதையும் மீறி இவர் புகழ் பெற்றது பெரிய விசயம்.

மாங்காடு கோவில்

இன்று வெளியில் சென்று விட்டு மாங்காடு கருமாரியமண் கோவிலுக்கு சென்றிருந்தோம். நாங்கள் சென்றது இரவு 8 மணிக்கு அதனால் கூட்டமே இல்லை. அதனால் பொது தரிசனத்தில் சாமி பார்க்கலாம் என பார்த்தால், பொது தரிசனத்திற்கு கோவிலின் பின் பக்கதில் இருந்து வரிசையில் வர வேண்டுமாம். 20,50 ரூபாய் தரிசனத்திற்கு வாசல் அருகில் உள்ள வழியாகவே செல்லலாமாம். பொது தரிசன வரிசைக்கு விளக்கு வெளிச்சம் இல்லை, காற்றோட்டம் இல்லை ஆனால் மற்ற வரிசைக்கு ஃபேன் உள்ளது, நல்ல வெளிச்சம் உள்ளது. இது என்ன கொடுமையோ தெரியவில்லை.


தமிழ் நாடு மற்றும் ஆந்திராவில் உள்ள கோவில்களில் தான் இப்படி எல்லாம். குறிப்பாக திருப்பதி கோவிலில் கூட்டம் இல்லாவிட்டால் கூட்டம் சேரும் வரை உள்ளே ஏதோ பூஜை நடப்பதாக அனைவரையும் வரிசையில் காக்க வைத்து விடுவார்கள். அப்படி கஷ்டப்பட்டு சாமியை மனநிறைவுடன் பார்க்க இயலாது. 10,20 வினாடிகளில் வெளியே அனுப்பிவிடுவார்கள்.

அதுவே கேரளாவில் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலாகட்டும், சபரிமலை ஆகட்டும் பணம் கொடுத்து வித்தியாசமாக சாமியை பார்க்க முடியாது. யாராக இருந்தாலும் அனைவரும் கடவுளுக்கு முன் சமமாக இருப்பர்.

இது எப்பொழுது தான் மாறுமோ தெரியவில்லை....அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்......

2 comments:

ராஜ நடராஜன் said...

காந்திமதியின் இறப்புக்கு எனது இரங்கலும் அனுதாபங்களும்.

க்ருபா said...

ஆந்திராவில் எப்படியோ தெரியவில்லை. ஆனால் தமிழகத்தில் அனேகக்கோயில்கள் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. எனவே, வருமானத்தைப் பெருக்க என்னவெல்லாம் செய்யமுடியுமோ அதையெல்லாம் செய்கிறார்கள்.

குருவாயூரப்பன், சபரிமலைக்கோயில்களை தனியாக தேவஸ்தானம் போன்ற ஒரு அமைப்பு நடத்துகிறது என்று நினைக்கிறேன். கேரள அரசாங்கம் நடத்துவதாகத் தெரியவில்லை.

பழங்காலத்தில் தமிழகக்கோயில்களுக்கு அரசாங்கம் சொத்துக்களை எழுதிவைத்தது. இந்தக்காலத்தில், கோயில்களிலிருந்து என்ன சுருட்ட முடியுமோ, எவ்வளவு கபளீகரம் செய்யமுடியுமோ அதைச்செய்கிறார்கள். பக்தர்களையும் முடிந்த அளவுக்குப் பிழிந்து எடுக்கிறார்கள்.