கடைகளில் பிளாஸ்டிக் பைகளை பற்றி மத்திய அரசின் முடிவு

Tuesday, September 13, 2011

கடைகளில் பிளாஸ்டிக் பைகளை பற்றி மத்திய அரசின் முடிவு




சென்ற இரு வாரங்களுக்கு முன்பு எல்லோரும் பத்திரிக்கைகளில் ஒரு விளம்பரத்தை பார்த்திருப்போம். அது மத்திய அரசின் முடிவின் காரணமாக இனி கடைகளில் பிளாஸ்டிக் பைகள் வழங்கப்படமாட்டாது என்று. வாடிக்கையாளர்கள் தங்களது பொருட்களை எடுத்து செல்ல தாங்களே பைகளை கொண்டுவர வேண்டும் இல்லை கடைகளில் வாங்கினால் அதற்கு தனியாக பணம் கொடுத்து வாங்க வேண்டும்.



கடைகளில் இது வரை இலவசமாக கொடுத்து கொண்டு இருந்த பைகளுக்கும் இப்பொழுது பணம் வாங்கத் துவங்கிவிட்டார்கள். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றால் அதற்கு பதிலாக பேப்பர் பைகளை கடைகள் கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருந்தால் பரவாயில்லை அதை விட்டுவிட்டு அதற்கு பணம் வசூலிக்க வேண்டும் என்று சொல்லி இருப்பது சுத்த மடத்தனம்.



இது பெரிய வர்த்தக நிருவணங்களிடமிருந்து வேண்டியதை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு சாதகமாக சொல்லி இருப்பதையே காட்டுகிறது. சென்ற வாரம் ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ் சென்று இருந்தேன். பொருட்களை வாங்கிவிட்டு பை இருக்கிறதா என்றார்கள்? இல்லை என்றதும் பைக்கு 10 ரூபாய் வேண்டுமா என்கிறார்கள். இது பகல் கொள்ளை. பணம் கொடுத்து வாங்கும் பையில் அவர்களது விளம்பரம் வேறு. பெரிதாக பெயரை போட்டுக்கொண்டுள்ளார்கள்.



இதனை பற்றி எங்கும் எதிர்பே வரவில்லை..மக்கள் ஏற்றுக் கொண்டார்களா? உங்களின் கருத்துக்களை தெரிவிக்கவும்.

3 comments:

ELANGO T said...

தனியார் நிறுவனம் என்றால் அரசியல் கட்சிகள் கண்டுகொள்வதே கிடையாது.இதனையே (பிளாஸ்டிக் தூக்கு பைகளை காசுக்கு கொடுப்பது)அரசு நடத்தும் நிறுவனமாக இருந்திருந்தால் கிழி கிழியென்று கிழித்திருப்பார்கள்

குறையொன்றுமில்லை. said...

ஜனங்கள் கொஞ்சமாவது விழிப்புணர்வுடன் நடந்து கொள்ளனும். வீட்டிலேந்தே துணிப்பையோ பேப்பர் பையோ கயில் கொண்டு போயி சாமான் வாங்கி வருவதை வழக்கப்படுத்திக்கொள்ளலாம்.அப்பத்தான் ப்ளாஸ்டிக்கின் உபயோகம் கொஞ்சமாவது குறையும்.

Rajkumar said...

பூவரசு மற்றும் லஷ்மி அவர்களே, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..