சென்னையில் மழைக்காலம்

Thursday, October 29, 2009

இப்பொழுது சென்னையில் மழை ஆரம்பமாகிவிட்டது.இப்பொழுதே வழி எங்கும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.கொசு தொல்லை வேறு அதிகமாகிவிட்டது.
இன்று (29/10/2009) விடியற்காலையில் இருந்து 1 மணி நேரத்திற்கு மேல் மழை பெய்தது. அதற்கே எங்கள் பகுதியில் நிறைய இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்க ஆரம்பித்து விட்டது.இது எங்கள் பகுதியில் மட்டும் அல்ல, பெரும்பாலான சென்னையின் பகுதியில் இப்படிதான் இருக்கிறது.
ஒவ்வொரு வருடமும் இது தொடர்கதையாக தொடர்கிறது.அரசு எடுக்கும் நடவடிக்கைகள் போதவில்லையா அல்லது நடவடிக்கையே இல்லையா என்பது தெரியவில்லை..
ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் மழையால் ஏற்பட்ட பாதிப்பை நாம் நன்கு அறிவோம். அதனை பார்த்து தமிழக அரசு என்ன முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுத்தது என்றே தெரியவில்லை. நமது மேயர் சென்னையில் அனைத்து முன்னெச்செரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டுவிட்டதாகவும் மழைக்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
இது ஏதோ மழை வருவதற்கு முன்பு சம்பிரதாயமாக கூறுவது போல்தான் உள்ளது.

நமது மக்களும் மழைக்கு பிறகு அரசும், அரசியல்வாதிகளும் தரும் இலவசத்தை வாங்குவதற்கு போட்டி போடுகிறார்கள். ஏன் மழையால் வரும் பாதிப்பை முன் கூட்டியே தடுக்கவில்லை என்று யாரும் கேட்பதில்லை. இலவசங்கள் அனைவரது கண்களையும் மூடிவிடுகிறது. அதனை அனைத்து கட்சிகளும் பயன்படுத்திக்கொள்கிறது.

இதனை பற்றி அலச ஆரம்பித்தால் நிறைய பேச வேண்டும். போதிய அடிப்படை வசதிகளே இல்லாத பகுதிகளில் வீடுகளை கட்டிகொள்வதால் ஏற்படும் பிரச்சனைகளில் இது முதன்மையானது.

சென்னையின் பல்வேறு ஏரி, குளங்கள் பிளாட் போட்டு விற்பனை ஆகிக்கொண்டு இருக்கிறது. இது அனைவருக்கும் தெரியும். அப்படிபட்ட இடங்களில் தான் நாம் இருக்கிறோம். இப்படி நீர்தேக்கங்களை எல்லாம் வீடு கட்ட பயன்படுத்தினால் நீர் தேங்க இடம் இல்லாமல் ரோடுகளில் எல்லாம் தண்ணீர் தேங்கிவிடுகிறது. இதனை தடுக்க வேண்டிய அரசோ பல ஏரிகளில் வீட்டு வசதி வாரிய வீடுகளை கட்டி விற்கிறது. மேலும் அரசியல்வாதிகள் தங்கள் பங்குக்கு பிளாட் போட்டு விற்று விடுகின்றனர். அரசு அதிகாரிகள் தங்களுக்கு வரவேண்டியது வந்துவிட்டால் அதனை கண்டு கொள்வதே இல்லை.

கடைசியில் கஷ்டப்படுவது என்னவோ பொதுஜனங்களாகிய நாம் தான். இந்நிலை என்று மாறுமோ??????

0 comments: