வைகோ காங்கிரஸில் சேரப்போகிறார்

Friday, April 1, 2011

வைகோ காங்கிரஸில் சேரப்போகிறார்

   வைகோவுக்கு  தமிழ் நாட்டில் ஏகப்பட்ட ஏமாற்றங்கள். அதனால் மிகவும் மனம் உடைந்து போயிருந்தார். மீண்டும் திமுகவுக்கே வந்து சேர்ந்து விட சொல்லி அனைவரும் கேட்டு இருந்தனர். ஆனால் அவர் மனம் அதற்க்கு இடமளிக்கவில்லை.

    இப்படி இருக்க இனிமேலும் தன்னால் தனியாக தமிழ்நாட்டில் கட்சி நடத்த முடியாது என்றும்  ஏதாவது தேசிய கட்சியுடன் சேர்ந்து விடுவது என்றும் முடிவு செய்து இருந்தார். இந்த நிலையில் தங்கபாலு தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அதனால் அதற்க்கு தகுந்த ஒரு தலைவரை அக்கட்சி தேடி வந்தது.

   இந்நிலையில் வைகோவுடன் பேசிய அக்கட்சியின் அகில இந்திய முக்கிய தலைவர், வைகோ காங்கிரஸில் இணைந்தால் அக்கட்சியின் தலைவர் பதவி தருவதாக கூறியுள்ளார். அதனை ஏற்று வைகோவும் அக்கட்சியில் இணைவார் என்று தெரிகிறது.

    இதற்காக அவர் டெல்லி சென்று சோனியாவை பார்பதற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டு உள்ளன. ஓரிரு நாட்களில் அவர் சேர்ந்துவிடுவார் என தெரிகிறது.


   இப்படி எல்லாம் நடக்குமா என்று நீங்கள் நினைப்பது தெரிகிறது. ஆனால் ஏப்ரல் 1  அன்று இது போல நிறைய நிகழ்ச்சிகள் நடக்கும். ம்...ம்...ம்....ம்....
   

0 comments: