போலி விமானிகள் ஜாக்கிரதை

Thursday, April 7, 2011

போலி விமானிகள் ஜாக்கிரதை என்று இப்பொழுது அடிக்கடி செய்தி பார்கிறோம் அல்லது படிக்கிறோம், இது எவ்வளவு வேதனையான விசயம். எப்படி இது போல போலிகள் வருகிறார்கள்? அவர்களுக்கு விமானியாக வேலை செய்ய தகுதி இருக்கிறது என்று போலியாக தகுதி சான்றிதழ் கொடுத்ததனால் தானே!! அப்படி என்றால் அதனை கொடுத்தவனையும் சேர்த்தே அல்லவா பிடிக்க வேண்டும்.

 ஆனால் இதுவரை தகுதி சான்றிதழ் கொடுத்த ஒருவர் கூட கைதோ அல்லது வேலையிலிருந்தோ தூக்கப்படவில்லை. குற்றம் செய்தவனை விட குற்றம் செய்ய தூண்டியவனுக்கு தான் தண்டனை அதிகம். எனவே அவர்களும் தண்டிக்கப்பட வேண்டும்.

 இது மட்டும் இந்த பதிவின் நோக்கம் அல்ல. ஆர்டிஓ அலுவலங்களில் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு ஓட்டுனர் உரிமம் கொடுப்பதையும் அலசுவோம். சென்ற மாதம் ஓட்டுனர் உரிமம் வாங்க சென்றிருந்தேன்.


 என்னிடம் கார் இருப்பதாலும் ஓட்டுனர் பழக்க வகுப்புக்கு சென்றிருந்ததாலும் நான் நன்கு பழகிக்கொண்டேன். ஆனால் அங்கு வந்த 50 பேரில் 10 பேர் மட்டுமே ஒழுங்காக ஓட்ட தெரிந்தவர்கள். மற்ற அனைவரும் ஏதோ பயிற்சி வகுப்பு முடிந்து விட்டதே என்று உரிமம் எடுக்க வந்து இருந்தனர்.

 அலுவலர்களும், தேர்வு வைப்பதும் மிகவும் மோசம். என்னை காரை ஆன் செய்து ஓட்ட சொன்னார்கள் ஓட்டினேன், ஒரு 50 அல்லது 60 மீட்டர் தூரம் ஓட்டியதும் போதும் என்று இறக்கி விட்டார்கள். என்னுடன் வந்த பெரியவருக்கு அன்று மறு தேர்வு, அதனால் பயத்துடன் ஓட்டினார் மற்றும் ஒருவர் சரியாக ஓட்டவே இல்லை. ஆனால் அனைவரையும் மாலை வந்து ஓட்டுனர் உரிமம் வாங்கிகொள்ள சொல்லி விட்டனர்!!!.


 எந்த விதத்தில் இது மட்டுமே போதும். நிறைய போக்குவரத்து உள்ள இடங்களில் ஓட்ட சொல்ல வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கு பயமில்லாமல் வண்டியை நிறுத்தாமல் ஓட்ட முடிகிறதா என்று பார்க்கமுடியும். அதைவிட்டுவிட்டு 50 அல்லது 60 மீட்டர் தூரம் ஓட்டியதை வைத்து ஒருவருக்கு உரிமம் தருவது எனக்கு சரியாக படவில்லை.

 இப்படி போவோர் வருவோருக்கு எல்லாம் உரிமம் கொடுத்தால் விபத்துக்கள் நேருவதை தவிர்க்க முடியாது. விமானி சரியாக ஓட்டவில்லை என்றால் 50லிருந்து 200 பேர்தான் பாதிக்க படுவர் அதுவும் விமானத்தில் செல்லும் மக்கள் தான் பாதிக்க படுவர்.

 ஆனால் இது போல உரிமம் கொடுப்பதால் சம்பந்தம் இல்லாதோரும் பாதிக்கப்படுவர். இது அதனை விட மோசம். எனவே உரிமம் வழங்குவதில் சரியான அணுகுமுறையை கையாள வேண்டும். பார்க்கலாம் என்று இந்த நிலைமை மாறும் என்று???!!!!!

0 comments: