CBSE வழி கல்விமுறை மற்றும் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி சொல்லிக்கொடுக்கிறார்கள். எனவே பள்ளிக்கு நல்ல பெயர். எனது மனைவியின் அக்கா மகன் அங்கு தான் படித்தான். அவன் மிகவும் நன்றாக சொல்லிக்கொடுக்கிறார்கள் என சொல்லியதால் நாங்கள் அந்த பள்ளியையும் எங்களது அப்ளிகேசன் வாங்கும் list ல் வைத்து இருந்தோம்.
இந்த வாரம் ஞாயிற்றுகிழமை, அந்த பள்ளியில் அப்ளிகேசன் கொடுப்பதாக அறிவித்திருந்தார்கள். அதனை வாங்குவது பற்றி பள்ளியில் முன்னறே விசாரித்து வைத்து இருந்தேன். அவர்கள் காலையில் 8 மணிக்கு வந்தால் போதும், முதலில் வருவது எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள படாது என தெரிவித்திருந்தார்கள். அதனால் நான் காலை 5 மணிக்கு எதற்கும் போய் பார்கலாம் என்று சென்றேன்.
அங்கு போனால் 500 பேருக்கு மேல் வரிசையில் இருந்தார்கள். எப்பொழுது வந்தார்கள் என விசாரித்தால், இரவு 10.30 மணிக்கே வந்து விட்டதாக கூறினார்கள். நான் ஏதோ சீக்கிரமாக வந்து விட்டதாக நினைத்தால், இது என்ன கொடுமை என நினைத்தேன்!!...இரண்டு மணி நேரம் வரிசையில் அமைதியாக நின்றேன். 7 மணியளவில் பள்ளியின் கதவை திறந்தார்கள். ஏதோ சொர்க வாசல் கதவு திறந்தது போல், அனைவரும் அடித்து பிடித்து உள்ளே ஓடினார்கள். அதுவரை இருந்த வரிசை எல்லாம் கலைந்து போனது!!!!
எல்லோரும் ஓட, நானும் ஓடினேன். நான் உள்ளே செல்வதற்குள் அனைவரும் உள்ளே போட்டிருந்த நாற்காலிகளில் உட்கார்ந்து விட்டனர். நாங்கள் சில பேர் மட்டும் பாவமாக பார்த்தோம்.
சிறிது நேரம் கழித்து மேலும் சில நாற்காலிகள் போடப்பட்டன. அதில் வெற்றிகரமாக ஒரு நாற்காலியை பிடித்து அமர்ந்தேன். சிறிது நேரம் கழித்து, அங்கு வேறு ஒரு இடத்தில் டோக்கன் கொடுப்பதாக சொன்னார்கள். அதற்கு எழுந்து போவதா அல்லது கிடைத்த நாற்காலியை விடாமல் பிடித்து கொண்டு இருப்பதா என யோசித்து கொண்டு இருக்கும் பொழுதே, அங்கு கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். அடித்து பிடித்து டோக்கன் வாங்கினேன். அப்பாடா வாங்கிவிட்டேன் என நினைத்தால், இது வெறும் டோக்கன் மட்டும்தான், இதை கொண்டு registration செய்ய வேண்டும், அதற்கு 8 மணி வரை பொருத்திருங்க்ள் என்றனர்.
அதற்குள் registrationக்கு ஒரு பெரிய வரிசை ஏற்பட்டு விட்டது. எதற்கும் பள்ளியில் ஒரு சரியான வழிகாட்டுதல் இல்லை. ஏதோ musical chair விளையாடுவதை போன்று நாங்கள் எல்லாம் அழைந்தோம்.
பிறகு 8 மணிக்கு வரிசை நகர ஆரம்பித்து விட்டது. ஒரு வழியாக registration form fill செய்து கொடுத்து விட்டு வந்தேன். அந்த formல் ஏதோ வரிசை எண் இருந்தது. எதற்கு இந்த வரிசை எண் என்பது தெரியவில்லை. பள்ளியில் முன்னர் சொல்லியது போல், முதலில் வருவது எல்லாம் கணக்கில் எடுத்து கொள்ளபடாது என்றால், எதற்கு அந்த வரிசை எண் என்றே தெரியவில்லை.
இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், இரவு 10.30 மணிக்கே வந்து பள்ளியின் முன் வந்து இருந்தவர் எனக்கு பின்னால் வரிசையில் நின்று கொண்டு இருந்தார்!!!
அந்த பள்ளி மாணவர்களை தேர்ந்தெடுக்க கையாளும் முறை மிகவும் சுவாரசியமானது.
1. மாணவர்கள் பள்ளியில் இருந்து 3K.M. தொலைவிற்குள் இருக்க வேண்டும். -இது அனைவரும் ஒத்துக்கொள்ள கூடியது. அருகில் இருந்தால் மாணவன் சுலபமாக பள்ளி சென்று வரலாம். அதற்கு அவர்கள் முகவரி சான்று கேட்டார்கள். என்னிடம் ரேசன் கார்டு இருந்தது. ஆனால் தற்பொழுதுதான் நான் புதிய முகவரிக்கு மாற்ற கொடுத்து இருந்தேன். அத்னால் அதனை தற இயலவில்லை. பள்ளியில் கேட்டதற்கு கேஸ் சிலிண்டர் பில் இருந்தால் கூட போதும் என்றனர். அதனால் நான் அதனையும், எதற்கும் இருக்கட்டும் என்று ரேசன் கார்டு நகலையும் எடுத்து சென்றேன். Registration ஆரம்பிக்கும் சமயம் முகவரி சான்றாக கேஸ் பில்லை எல்லாம் எடுத்து கொள்ள மாட்டோம் என கூறி விட்டனர். அதனால் பழைய முகவரியை கொண்ட ரேசன் கார்டின் நகலையே கொடுத்தேன்.
2. மாணவர்களின் பிறந்த தேதி அவர்கள் சேரும் வகுப்பை பொறுத்து இருக்க வேண்டும் என்றனர். அதாவது LKG சேரும் குழந்தை ஜுலை முதல் தேதி 2010 அன்று சரியாக 3 வயது முடிந்து இருக்க வேண்டும் என்றனர். இரண்டு மாதம் முன்னரோ அல்லது பின்னரோ இருக்கலாமாம். எனது மகனுக்கு அது சரியாக வந்துவிட்டது. ஆனால் பல குழந்தைகள் October முதல் February வரை பிறந்து இருந்தார்கள். அவர்களுக்கு தான் கஷ்டம். அங்கு இருந்தவர்கள் பலர் இதை பார்த்துதான் குழந்தையே பெற்றுகொள்ள வேண்டும் போலிருக்கிறது என பேசிக்கொண்டனர். அதுவும் உண்மைதான் போலிருக்கிறது.
3. மேலே கூறியவற்றை தவிர அவர்கள் வேறு எதையுமே கேட்கவில்லை. பெற்றோருக்கு எந்த interview ம் இல்லை. அவர்கள் எந்த வேலை செய்கிறார்கள் அவர்களின் பின்புலம் என்ன என்று எந்த கேள்வியும் இல்லை. இதனால் அனைத்து தரப்பு மக்களின் குழந்தைகளும் அங்கு படிக்க முடியும். மிகவும் நல்ல விசயம் இதுதான்.
2 comments:
Two things.
1. The school don't know how to treat human beings. Not sure how can they teach values to it's students.
2. A by-product of first thought. They don't seem to have any sense of efficiency, adopting processes.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
Post a Comment