சேலம் - சென்னை விமான இயக்கம்

Friday, September 11, 2009

சேலத்திற்கும் சென்னைக்கும் விமான சேவையை வழங்க கிங் ஃபிசர் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வளவு நாளாக அரசியல் தலைவர்கள் மட்டுமே வந்து செல்ல பயன்பட்ட விமான நிலையம், இனியாவது மக்களின் நலனுக்காக பயன்படட்டும்.இச்சேவை அக்டோபர் 25, 2009 நாளிலிருந்து தொடங்கப்பட உள்ளது.

இதற்கு முன் சென்னை-சேலம் விமான வசதி இருந்தது. ஆனால் போதிய பயணிகள் இல்லாத காரணத்தினால் விமான சேவை ரத்து செய்யப்பட்டது. அப்படி இருக்க கிங்ஃபிசர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள இந்த அனுமதி முக்கியமாக படுகிறது.

கிங்ஃபிசர் நிறுவனத்தின் கட்டணம் மற்றவற்றை விட அதிகம். அப்படி இருக்க, அதில் எவ்வாறு மக்கள் பயணம் செய்வார்கள். ஏனெனில், சேலத்திலிருந்து சென்னைக்கு 1 மணி நேரத்திற்கும் மேலாக பயண நேரம் உள்ளது. இரயிலில் ஐந்து அல்லது ஆறு மணி நேரத்தில் சென்னைக்கு வந்து விடலாம்!!!!

மேலும் இது சென்னையிலிருந்து மதியம் 2.45 PM கிளம்பி சேலத்திற்கு 3.45க்கு செல்லும். மற்றும் சேலத்திலிருந்து 4.20 P.Mக்கு கிளம்பி 5.20 PMக்கு சென்னைக்கு வந்து சேரும்.

இதற்கு பதிலாக சேலத்திலிருந்து காலை 8 மணிக்கு கிளம்பி சென்னைக்கு 9 அல்லது 10 மணிக்குள் வந்து சேர்ந்து, சென்னையிலிருந்து இரவு கிளம்பி 7 அல்லது 8 மணிக்கு மேல் கிளம்பி சேலம் போய் சேர்ந்தால், சென்னைக்கு வேலைக்குச்சென்றுவருபவர்களும் சென்று வர வசதியாக இருக்கும்.
எப்படியோ திரும்பவும் விமான சேவை வந்துள்ளது, இதுவாவது தொடருகிறதா என்று பார்ப்போம்!!!!

0 comments: