சீனாவின் எல்லை மீறல்

Friday, September 11, 2009

சில நாட்களுக்கு முன்பு சில நாளிதழ்களில் மட்டும், சீனாவின் எல்லை மீறல் பற்றிய செய்தி வெளிவந்து இருந்தது.

அருணாசல பிரதேசம் என்று நினைக்கிறேன்... அந்த மாநிலத்தின் எல்லை பகுதியினுள் சீன ராணுவம் நுழைந்தது என்று செய்தி வெளிவந்தது. சுமார் 1.5 கி.மீ. தூரம் இந்திய எல்லையினுள் நுழைந்து அங்கு இருந்த பகுதிகளுக்கு சிவப்பு வண்ணத்தில் வர்ணம் பூசி சென்று விட்டதாக செய்தி வெளியானது.

இந்த செய்தியை படித்ததும், எல்லைப்பாதுகாப்பை நாம் எவ்வளவு நன்றாக வைத்திருக்கிறோம் என்பது புரிந்து விட்டது. அவர்கள் நமது எல்லையினுள் 1.5 கி.மீ. தூரம் வந்ததே பெரிய விசயம். அது மட்டும் இல்லாமல் அவர்கள் வந்து சென்றதற்கு அடையாளமாக சிகப்பு வர்ணம் வேறு பூசிவிட்டு சென்று விட்டனர்.

ஒரு வேளை இப்படி இருக்கலாம்..... அவர்கள் இதற்கு முன்பு பல முறை இந்தியாவினுள் ஊடுறுவி இருக்கலாம்.. அது இந்தியாவிற்கு தெரியாமல் இருந்திருக்கலாம், அதனால் கடுப்பாகி வர்ணம் அடித்தாலாவது இந்தியா தெரிந்து கொள்ளுமா? என்பத்ற்காக அவ்வாறு செய்திருக்கலாம்...

எல்லாம் சிதம்பர ரகசியம்....!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

0 comments: