இந்தியா இலங்கை இடையே நடந்த காம்பேக் கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் இந்தியா வென்று கோப்பையை வென்றது.
இந்தியா,இலங்கை மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் இடையே நடைப்பெற்ற காம்பேக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நடைப்பெற்றது. இதில் தகுதிச்சுற்றில் நியூசிலாந்து இலங்கை மற்றும் இந்தியாவிடம் தோற்று தகுதி பெற தவறியது.
நேற்று நடைப்பெற்ற இறுதிப்போட்டியில் இந்தியாவும் இலங்கையும் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் களம் இறங்கிய இந்தியா 319 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்தது.
அதனை தொடர்ந்து விளையாடிய இலங்கை 46.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கட்களையும் இழந்து 273 ரன்கள் எடுத்தது.
ஆட்ட நாயகன் விருதும் தொடர் நாயகன் விருதும் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டது.
இலங்கையில் போர் என்ற பெயரில் இனப்படுகொலைகள் நடந்து வரும் சூழலில் இந்திய அணி அங்கு சென்று கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
1 comments:
Good to read...
Post a Comment