ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.......

Saturday, September 5, 2009


Happy Teacher's Day

Hi We wish all our teachers a very Happy Teacher's Day...

Sarvapalli Radhakrishnan
(5th September 1888- 17th April 1975)

For more information on him visit
தமிழில்

இன்று மாலை சில பள்ளிகள் வழியாக சென்றேன். நான் செல்லும் போது அங்கு ஆசிரியர் தின விழா நடந்து கொண்டிருந்தது. ஆர்வம் மிகுதியில் பள்ளியின் உள்ளே எட்டிப்பார்த்தேன். ஓர் ஆசிரியர் பேசிக்கொண்டு இருந்தார். நான்கு அல்லது ஐந்து பேர் அமர்ந்து கேட்டுக்கொண்டு இருதார்கள். ஒரு மாணவனையோ அல்லது மாணவியையோ காணவில்லை. ஏன் என்று தெரியவில்லை. ஒரு வேளை இன்று ஆசிரிய்ர் தினத்தை முன்னிட்டு உலகத்தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக ஏதாவது தமிழ் திரைப்படம் போட்டு இருக்கலாம். என்னுடன் வந்த என் மனைவி அவரது பள்ளிக்கால்த்தை நினைவு கூர்ந்தாள். அது ஒரு காலம்.

பள்ளிகளாவது, மாணவர்க்ளை கண்டிப்பாக வரச்சொல்லி இருக்கலாம். அல்லது பெற்றோர்களாவது இது போன்ற நாட்க்ளை குழந்தைகளுக்கு எடுத்து சொல்லி தெரிந்து கொள்ள செய்யலாம். பார்ப்போம் இனி வருங்கால சந்ததியினரை.. ஆசிரியரையோ அல்லது குருவையோ மதிக்காத தேசம் வளருவது கடினம்......

0 comments: